Sindhu : புற்றுநோயுடன் போராடிய நடிகை சிந்து கடந்துவந்த துயர சம்பவங்கள்!
Sindhu : புற்றுநோயுடன் போராடிய நடிகை சிந்து கடந்துவந்த துயர சம்பவங்கள்!Twitter

Sindhu : புற்றுநோயுடன் போராடிய நடிகை சிந்து கடந்துவந்த துயர சம்பவங்கள்!

”அப்போது ஒருவர் சிகிச்சைக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கூட கேட்டார். ஒரு 3 லட்சம் ரூபாய் இருந்தால் போதுமா என கேட்டார். 3 லட்சம் ரூபாய் பதிலாக 5 லட்சம் ரூபாய் கூட தருகிறேன் வீடியோ கால் பண்ணி இடது பக்க மார்பகத்தை காட்டுமாறு கேட்டார் ,எனக்கு ரொம்ப வலித்தது” என்றார் சிந்து
Published on

அங்காடி தெரு பட நடிகை சிந்து, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடி தெரு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் சிந்து. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக அவர் இங்கிலீஷ் மருந்து, நாட்டு மருந்து என பல சிகிச்சைகள் மேற்கொண்டு வந்தார்.

அந்த சிகிச்சை மிகவும் கடினமாக இருப்பதாகவும், பண உதவி தேவைப்படுவதாகவும் பல பேட்டிகளில் தன்னுடைய வேதனையை, சிரமங்களை தெரிவித்திருந்தார்.

குறிப்பாக ஒரு பேட்டியில் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட நபர் குறித்து சிந்து பேட்டி அளித்திருந்தார்.

அவர் கூறுகையில், “மனரீதியாகவும் வலி, உடல் ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும், வலியில் இருக்கும் போதும் இன்னும் நிறைய கஷ்டம் தருகிறார்கள்.

இதுவரை நான் 100 நம்பர் பிளாக் செய்து வைத்து இருக்கிறேன்.

ஒரு நாள் தொடர்ந்து கால் வந்துகொண்டே இருந்தது. யாரோ உதவி செய்யத்தான் அழைக்கிறார்கள் என்று அந்த அழைப்பை எடுத்து பேசினேன்.

அப்போது ஒருவர் தான் கோயம்புத்தூரை சேர்ந்தவர் என்றும், ரொம்ப டீசெண்டாகவும் பேசினார். சிகிச்சைக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கூட கேட்டார். ஒரு 3 லட்சம் ரூபாய் இருந்தால் போதுமா என கேட்டார். நானும் சரி என்று சொன்னேன். சரி 3 லட்சம் ரூபாய் பதிலாக 5 லட்சம் ரூபாய் கூட தருகிறேன் என்றார்.

Sindhu : புற்றுநோயுடன் போராடிய நடிகை சிந்து கடந்துவந்த துயர சம்பவங்கள்!
Kailasa: நித்தியானந்தாவின் கைலாசா நாட்டுக்கு பிரதமராக பொறுப்பேற்ற நடிகை ரஞ்சிதா?

மார்பகத்தில் எந்த பக்கம் சிகிச்சை நடந்து இருக்கிறது என கேட்டார். நானும் வலது பக்கம் நடந்தது என சொன்னேன். பிறகு வீடியோ கால் வர முடியுமா என கேட்கிறார். வலது பக்கம் தானே காயம் இருக்கிறது, அதனை கவர் செய்துவிட்டு இடது பக்கம் காட்டுமாறு என கேட்டார். ரொம்ப வலித்தது.

உன் அம்மா கிட்ட பால் குடிச்சிருக்கிறாயா? என நான் கேள்வி கேட்டதற்கு, உடம்பு சரியில்லாத போதே உனக்கு இவ்வளவு திமிரா எனக் கேட்டுவிட்டு போன் வைக்கிறார். ரொம்ப வேதனையாக இருந்தது. உதவி செய்யவில்லை என்றால் விட்டுவிட வேண்டும். என் பொண்ணும், பேத்தியும் இல்லை என்றால் நான் உயிரிழந்து இருப்பேன். அவர்களுக்காக தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ” என அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Sindhu : புற்றுநோயுடன் போராடிய நடிகை சிந்து கடந்துவந்த துயர சம்பவங்கள்!
Samantha : மீண்டும் ஹைபர்பேரிக் சிகிச்சையில் நடிகை - என்னதான் ஆச்சு சமந்தாவுக்கு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com