நடிகை சமந்தாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது.
இதற்காக நடிகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின் உடல் நலம் தேறினார். ஓய்வுக்கு பின் மீண்டும் படங்களில் நடித்து வந்தார்.
சமந்தா நடித்த 'சாகுந்தலம்' படம் சமீபத்தில் வெளியானது, ஆனால் படம் தோல்வியை சந்தித்தது.
'சாகுந்தலம்' பட தோல்வி அவரது சினிமா வாழ்க்கையில் சறுக்கல் ஏற்படுத்தி உள்ளதாக தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டிபாபு விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சைபெறும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதை பார்த்து ரசிகர்கள் அவருக்கு என்ன ஆனது என்று அதிர்ச்சி அடைந்தனர்.
அதுமட்டுமில்லாமல் ஜிம், பயணம், உணவு என தனது அன்றாட வேலைகள் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.
சமந்தா தனது ஆரோக்கியத்தை மேம்படுத்த செயற்கை சுவாச கருவியுடன் ஹைபர் பரிக் என்ற சிகிச்சையை மேற்கொண்டு வருவதாகவும், மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி இந்த சிகிச்சை முறையை தொடர வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
ஹைபர் பரிக் சிகிச்சை என்பது செயற்கை ஆக்சிஜன் செயல்முறையாகும்.
இந்த சிகிச்சையானது பொதுவாக வழக்கமான சிகிச்சைகளுக்கு கட்டுப்படாத மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
டிகம்ப்ரஷன் நோய், குணமடையாத காயங்கள், நோய்த்தொற்றுகள் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு நிலைகளுக்கு சிகிச்சையளிக்க ஹைபர்பேரிக் சிகிச்சை பயன்படுத்தப்படலாம்.
இது சில சமயங்களில் கீமோதெரபி போன்ற பிற சிகிச்சைகளுடன் இணைந்து, அவற்றின் செயல்திறனை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust