AR Rahman : ரூ.1.5 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய மகள்கள் - ரஹ்மானின் ரியாக்ஷன்?

அது நீலநிற மெட்டாலிக் கார். ஆடம்பரமான தோற்றத்தைக் கொண்டுள்ள அதன் நம்பர் ப்ளேட்டில், "ARR Studios" என எழுதப்பட்டிருந்தது.
AR Rahman : ரூ.1.5 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய மகள்கள் - ரஹ்மானின் ரியாக்ஷன்?
AR Rahman : ரூ.1.5 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய மகள்கள் - ரஹ்மானின் ரியாக்ஷன்? twitter
Published on

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்களான கத்திஜா ரஹ்மான் மற்றும் ரஹிமா ரஹ்மான் இணைந்து புதிய சொகுசு காரை வாங்கியுள்ளனர்.

எலக்ட்ரிக் காரான Porsche Taycan EV -ன் மதிப்பு சுமார் 1.53 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

ரஹ்மான் தந்தை என்ற பெருமிதத்துடன் மகள்கள் காரின் முன்நிற்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அது நீலநிற மெட்டாலிக் கார். ஆடம்பரமான தோற்றத்தைக் கொண்டுள்ள அதன் நம்பர் ப்ளேட்டில், "ARR Studios" என எழுதப்பட்டிருந்தது.

தனது இன்ஸ்டாகிராமில் இதனைப் பதிவிட்ட ரஹ்மான், “#ARRstudios-ன் இளம் தயாரிப்பாளர்கள், மெட்டாவர்ஸ் திட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார்கள்" எனக் கூறி மகள்களையும் டேக் செய்திருந்தார்.

அத்துடன் அவர்கள் பசுமையைக் காக்கும் விதமாக எலெட்ரிக் கார் வாங்கியதையும் பாராட்டினார்.

இதனை #bosswomen #girlpower என்ற ஹேஷ்டேக் உடன் பதிவிட்டிருந்தார் இசைப்புயல்.

போர்ஸ்சே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார்கள் வெளியாகியிருக்கின்றன.

ரஹ்மான் சகோதரிகள் வாங்கியுள்ள காரின் மாடல் மற்றும் விலை சரியாக தெரியவில்லை என்றாலும் 1.53 - 2.34 கோடி ரூபாயில் தான் இந்த கார்களின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

AR Rahman : ரூ.1.5 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய மகள்கள் - ரஹ்மானின் ரியாக்ஷன்?
AR ரஹ்மான் : "அங்கு நான் மட்டும் மாநிறமாக இருந்தேன்" - ஹாலிவுட் நாட்களை பகிர்ந்த இசை புயல்

சமீபத்தில் ரஹ்மான் இசையில் வெளியான வெந்து தணிந்தது காடு மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் இசைக்காக பாராட்டப்பட்டன.

ரஹ்மான் இசையில் 2023ம் ஆண்டு வெளியாகவுள்ள அயலான், மாமன்னன் படங்களுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த ஆண்டு ஸ்பாடிஃபையில் 1.6 பில்லியன் முறை ரஹ்மானின் பாடல்கள் கேட்கப்பட்டுள்ளது.

AR Rahman : ரூ.1.5 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய மகள்கள் - ரஹ்மானின் ரியாக்ஷன்?
”விடை கொடு சாமி” - இந்த ஏ.ஆர் ரஹ்மான் பாடல் திடீரென வைரலாக என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com