ஹாலிவுட் இந்தியர்களை எப்போதும் பெரிதாக வரவேற்பதில்லை. இப்போது பிரியங்கா சோப்ரா போன்ற இந்திய நடிகர்களை ஏற்றுக்கொண்டாலும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஏ.ஆர்.ரஹ்மான் ஹாலிவுட் படங்களில் தீவிரமாக இசையமைத்த போது நிலைமை இப்படி இருக்கவில்லை.
தனக்கு ஹாலிவுட்டின் ஆரம்பகாலத்தில் நிகழ்ந்தவைகள் பற்றி சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலில் மனம் திறந்து பேசியிருக்கிறார் இசைப்புயல்.
ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஆஸ்கர் வென்ற பிறகு ஹாலிவுட் வெளிச்சம் அவர்மீது பட்டது. "பல கதவுகள் அங்கு திறந்தன... ஹாலிவுட்டில் எல்லாருக்கும் என்னைத் தெரிந்தது, எனக்கு அவர்களை தெரியாவிடிலும் கூட... அங்கு ஒரே ஒரு மாநிற மனிதன் (Brown Guy) நான் மட்டும் தான்" என்று கூறினார்.
மேலும் ரஹ்மான், "அப்போது எனக்கு பல அழைப்பிதழ்கள் வந்தன. நான் அகெடமியின் உறுப்பினரனதும் எல்லா விருந்து அழைப்பிதழ்களும் வரத்தொடங்கியது. ஸ்பீல்பெர்க் உங்களை அழைக்கிறார், ஜேஜே ஆப்ராம்ஸ் உங்களை அழைக்கிறார், டிஸ்னி உங்களை அழைக்கிறார் என... நான் எல்லா விழாக்களுக்கும் சென்றேன்."
அதுவரை தனக்கு பார்டிகளுக்கு செல்ல நேரமிருக்கவில்லை என்று கூறிய ஏ.ஆர் ரஹ்மான் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த போது முழுமையாக எல்லாவற்றையும் அனுபவித்து வாழ்ந்ததாக கூறினார்.
"நான் புதிதாக பல விஷயங்களைச் செய்தேன். பார்டிகளுக்கு சென்று பலரை பார்த்தேன். அங்கு அதிக நேரம் இருக்க முடியாது. 10 -15 நிமிடங்களில் திரும்பிவிடுவேன். சத்தமான மியூசிக், குடித்துக்கொண்டிருப்பவர்கள், க்ளாஸ்ட்ரோபோபியா போன்ற காரணங்களால் ஹாய் மட்டும் சொல்லிவிட்டு திரும்பிவிடுவேன்" என்ற ரஹ்மான் அவரது மனதில் நின்ற ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.
2013ம் ஆண்டும் ஹாலிவுட்டின் முன்னணி நிறுவனமான டிஸ்னியின் ஃப்ரோசன் திரைப்பட பார்டிக்கு ரஹ்மான் சென்றிருக்கிறார். அது டிஸ்னியின் 90வது பிறந்தநாளும் கூட.
"நான் டிஸ்னியின் Million Dollar Arm படத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன் அப்போது ஃப்ரோசன் பார்டிக்கு சென்ற போது அங்கிருந்த வால்ட் டிஸ்னியின் சிலையுடன் செல்ஃபி எடுத்தேன். திரும்பி பார்த்த போது 100 பேர் என்னைப் பார்த்துக்கொண்டு நின்றனர். அங்கிருந்த ஒரே ஒரு மாநிற மனிதன் நான் மட்டும் தான்" என்றார் ரஹ்மான்.
ரஹ்மான் இசையமைத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகத் தரத்தில் அடுத்த மாதம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust