Baakiyalakshmi today episode : ராதிகாவை கொஞ்சும்போது பாக்யாவிடம் மாட்டிக்கொண்ட கோபி!

காதலியை டியர் என்று கூப்பிடுவது எல்லாம் வழக்கொழிந்து போன ஒன்று. கொஞ்சம் அப்டேட் ஆகுங்க கோபி அங்கிள். கோபி ராதிகாவுடன் போனில் கொஞ்சி கொண்டிருந்ததை பாக்யா பார்த்து விடுகிறார். மனமுடைந்து போகிறார்.
Baakiyalakshmi serial
Baakiyalakshmi serialTwitter
Published on

பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு அடிமேல் அடி விழுகிறது. எழில், தாத்தா, பாக்யா ஆகியோர் ரவுண்டு கட்டி கோபியை கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.

பாக்கியலட்சுமியை கோபி விவாகரத்து செய்யப் போகும் நிலையில், அவரின் நடவடிக்கையில் பாக்யாவுக்கு சந்தேகம் வலுக்கிறது.நேற்றைய எபிசோடில் இனியா தனக்கு தனியறை வேண்டும் என்பதை குடும்பத்தினர் முன்னிலையில் கேட்கிறார்.

16 வயது பெண்ணுக்கு தனியறை வேண்டும் என்று இனியா கேட்பது சரிதான். ஆனால் அவர் சொன்ன காரணம் தான் எரிச்சலூட்டுகிறது. ``அம்மா என் கூட தூங்குறது எனக்கு பிடிக்கல. எனக்கு பிரைவசி வேணும்’’ என்கிறார்.

Baakiyalakshmi serial
Baakiyalakshmi serialtwitter

பாக்யாவின் நிலை பரிதாபமாக இருக்கிறது. பாக்யாவை ஹாலில் அல்லது கிச்சனில் படுத்துகொள்ளுபடி கோபி மனசாட்சி இல்லாமல் சொல்கிறார்.  

இது முக்கியமான காட்சி. பல இந்திய குடும்பங்களில் குடும்ப தலைவி ஹாலில் தான் படுத்து தூங்குகிறார். இதற்கு நாம் தான் தீர்வு காண வேண்டும். அவர்களுக்கு பிரைவசி இருக்கிறது.

இப்போது விஷயத்துக்கு வருவோம்.  பாக்கியாவின் நிலையை பார்த்து பரிதவிக்கும் தாத்தா, கோபியின் ரூமில் தான் பாக்யா தூங்க வேண்டும் என்று சைகையில் சொல்கிறார். வீட்டில் உள்ள அனைவரும் இந்த முடிவுக்கு ஓகே சொல்கின்றனர். பொதுவாக சைலண்ட் மோடில் இருக்கும் செழியன், முதல் முறை வாயை திறந்து, அப்பா, அம்மா உங்க ரூம்ல தான் தூங்கணும் அதானே சரியா இருக்கும்’’ என்கிறான். பாக்யா தன் உடமைகளை கோபி ரூமுக்கு ஷிஃப்ட் செய்கிறார்.

Baakiyalakshmi serial
Baakiyalakshmi serialtwitter
Baakiyalakshmi serial
கணவனுடைய ஆவியின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்துக் கொண்ட பெண்.. நடந்தது என்ன.?

இன்றைய எபிசோட்.. இரவெல்லாம் போனில் ராதிகாவுடன் கோபி ரொமான்ஸ் செய்வார் போலும். பாக்யாவின் வருகையால் அது இனி நடக்காது என்று கோபி கடுப்பாகிறார்.

ஆனால் கோபியால் ராதிகாவுடன் பேசாமல் இருக்க முடியவில்லை. பெட்ஷீட் மூடி கொண்டு ராதிகாவுடன் போனில் பேசுகிறார். இதை பாக்யா கண்டுபிடித்துவிடுகிறார். மீண்டும் காலையில் எழுந்ததும் ராதிகாவுக்கு போன் செய்யும் கோபி, ``டியர் வாக்கிங் போ டியர்.

உன் கூட காலைல பேசுறது ஜாலியா இருக்கு. நானும் வாக்கிங் போகணும் டியர்’’ என்று போனை வைக்கிறார். ``உண்மை தான் கோபி அங்கிள் வயசாகிடுச்சு வாக்கிங் போங்க அதான் உடம்புக்கு நல்லது ’’ என்கிறது நம்ம மைண்ட் வாய்ஸ்.

இன்னொரு விஷயம் காதலியை டியர் என்று கூப்பிடுவது எல்லாம் வழக்கொழிந்து போன ஒன்று. கொஞ்சம் அப்டேட் ஆகுங்க கோபி அங்கிள். 

கோபி ராதிகாவுடன் போனில் கொஞ்சி கொண்டிருந்ததை பாக்யா பார்த்து விடுகிறார். மனமுடைந்து போகிறார். இந்த காட்சியோடு இன்றைய எபிசோட் முடிகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com