நடிகர் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் ’பீஸ்ட்’திரைப்படத்தின் டீசரை அண்மையில் சன்பிக்சர்ஸ் வெளியிட்டது. பெரும் வரவேற்பை பெற்ற இந்த டீசரில், காவிக்கலர் துணியை கிழிப்பது போன்றதொரு காட்சி இடம்பெற்றிருந்தது.
இந்தக் காட்சியை எடுத்துக் கொண்ட விஜய் ரசிகர்கள் மற்றும் பாஜக எதிர்பார்ப்பார்கள், பாஜகவை எதிர்ப்பதற்காகப் படத்தில் இடம்பெற்றிருக்கும் குறியீடு என சமூகவலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிடத் தொடங்கினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விக்ரம், “அன்பு சகோதரர் @actorvijay அவர்கள் காவியை கிழித்தெறிகிறார். தமிழ்நாட்டு ரசிகர்களின் மனநிலையை சரியாக பிரதிபலிக்கும் நடிகர். மகிழ்ச்சி #BeastTrailer தரம் ” என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
காவித்துணியை விஜய் கிழிப்பது போன்ற புகைப்படமும் சமூகவலைதளங்களில் வைரலானது. இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய பா.ஜ.க ஆதரவாளர்கள், விஜய் ரசிகர்கள் இவ்வாறு செய்வது அரசியல் நாகரீகமல்ல. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்படும் என அறிவித்தனர்.
இது ஒரு பக்கம் என்றால் இப்படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக கூறி முஸ்லீம் லீக் கட்சி இப்படத்திற்கு தடை கோரி உள்ளது.
குவைத் நாடும் இப்படத்திற்கு தடை விதித்துள்ளது.
இது குறித்த NewsSense கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
இப்படியான சூழலில் தளபதி மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஓர் அறிக்கை ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில், “அரசியல் தலைவர்களை, அரசுப் பதவிகளில் உள்ளவர்களை யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிக்கைகள், இணையதளங்கள் மற்றும் மீம்ஸ் வடிவில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது,” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் ஏற்கனவே அறிவுறுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள அவர், அவ்வாறு செயல்பட்டவர்களை இயக்கத்தை விட்டு நீக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.