Beast : முதல் நாளிலே சாதனை படைத்த விஜய்! வசூல் எவ்வளவு தெரியுமா?

பீஸ்ட் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முக்கிய பிரமுகர் செம்பியன், பீஸ்ட் திரைப்படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதாகவும், முந்தைய ரெக்கார்டுகளை முறியடித்து உலகம் முழுவதும் நம்ப முடியாத அளவு வசூல் சாதனை படைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
Beast
BeastTwitter
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். பரவலான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள விஜய் படங்கள் எப்போதும் வசூலை அள்ளுவது வழக்கம். அந்த வகையில் நேற்று வெளியான பீஸ்ட் திரைப்படமும் அதிக வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். அட்லி, லோகேஷ் வரிசையில் இளம் இயக்குநரான நெல்சன் திலீப்குமாருடன் இணைந்திருந்தார் விஜய். லோகேஷ் கனகராஜைப் போலவே விஜய்யை ஹேண்டில் செய்வதில் கொஞ்சம் சொதப்பியிருந்தார் நெல்சன். பீஸ்ட் விஜய் படமாகவும், நெல்சன் படமாகவும் இல்லாமல், சுவாரஸ்யமற்ற திரைக்கதையால் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

இதனால் ஈவினிங் மற்றும் இரவுக் காட்சிகளிலேயே திரையரங்குகள் தளபதிக்கான கொண்டாட்ட நிலையை இழந்திருந்தன. பீஸ்ட் திரைப்படம் விஜய்யின் ரசிகர்கள் மற்றும் இமேஜ் காரணமாக நல்ல வசூல் செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ்நாட்டில் 40 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

Beast
Beast: “இந்தியில விளக்க முடியாது, போய் தமிழ் கத்து கிட்டு வா” - அரசியல் பேசிய விஜய்

பீஸ்ட் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முக்கிய பிரமுகர் செம்பியன், பீஸ்ட் திரைப்படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதாகவும், முந்தைய ரெக்கார்டுகளை முறியடித்து உலகம் முழுவதும் நம்ப முடியாத அளவு வசூல் சாதனை படைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

பீஸ்ட் திரைப்பட வசூல் குறித்துப் பல தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், முதல் நாளில் அமெரிக்காவில் 6கோடி வரையிலும் ஆஸ்திரேலியாவில் 2 கோடி வரையிலும் வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஆந்திரா, கேரளா போன்ற பகுதிகளிலும் பீஸ்ட் திரைப்படம் நல்ல வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூவி ட்ராக்கரான மனோபாலா, பீஸ்ட் முதல் நாளில் தமிழ்நாடு முழுவதும் 26.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இது தளபதியின் இரண்டாவது அதிக கலெக்‌ஷன் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் புத்தாண்டு விடுமுறை வார இறுதி ஆகியவற்றைக்கொண்டு பீஸ்ட் நல்ல வசூல் செய்யும் எனக் கூறினாலும் எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் கேஜிஎஃப் 2 படத்தின் கடுமையான போட்டி காரணமாக வசூலில் தொய்வு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. ஓடிடி, சாட்லைட் உரிமங்கள் போன்றவற்றைக் கணக்கிடும் போது நிச்சயம் பீஸ்ட் தயாரிப்பாளருக்கு நல்ல லாபமாகவே அமைந்திருக்கும். சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அதன் பதிவில் "வீரராகவன் வசூல் கிளர்ச்சி" என்று பதிவிட்டிருப்பது குறிப்பிடதக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com