பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தினேஷ் விளையாடி வருகிறார். இவர் சீரியலில் நடிக்கும் போது சக நடிகை ஆன ரச்சிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் டெலிவிகடன் சேனலுக்கு தினேஷ் பெற்றோர் பேட்டியளித்துள்ளனர்.
இது குறித்து தினேஷ் பெற்றோர் கூறுகையில், தினேஷ் பிக் பாஸில் வெற்றி பெற்றால் அந்த கோப்பையை ரச்சிதாவிடம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
எங்கள் மகன் அப்படி பேசியது எங்களுக்கு பிடிக்கவில்லை. அந்த உறவு முடிந்து போனது. அதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. ரச்சிதாவால் தினேஷிற்கு 8 வருடங்கள் வீணாய் போனது. ரச்சிதா தான் பிடிவாதமாக உள்ளார். இந்த விஷயத்தை விட்டு வெளியே வந்தால் தினேஷுக்கு இன்னும் நல்ல வாழ்க்கை உள்ளது.
ரச்சிதா இனிமே தினேஷுக்கு தேவையில்லை. நாங்கள் நல்லவர்களாக தான் இருக்கிறோம். ரச்சிதா தான் பிடிவாதமாக இருக்கிறார். இருவரும் காதலித்த பின், எங்களிடம் சொல்லி சம்மதம் வாங்கி திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது.
ஆனால் கடைசியில் அந்த பெண், சிலரின் பேச்சைக் கேட்டு அவரின் வாழ்க்கையை அவரே கெடுத்துக் கொண்டார். தினேஷின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று நாங்கள் வருத்தப்படவில்லை. அவர் சென்றதும் இல்லாமல் எங்களையும் இந்த வேதனைக்குள் தள்ளிவிட்டார் என்று தினேஷின் பெற்றோர் கண்ணீருடன் பேட்டி அளித்து இருக்கிறார்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust