Bigg Boss 7: ரெட் கார்டு கொடுத்த பிரதீப் ஆண்டனி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பெண்களுக்கு பாதிகாப்பில்லை எனக் கூறி பிரதீப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது Unfair என முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட பிக் பாஸ் போட்டியாளர்கள், திரைப்பிரபலங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
Bigg Boss 7: know how much Pradeep Antony earned?
Bigg Boss 7: know how much Pradeep Antony earned?Twitter

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த போட்டியின் முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேற்றப்பட்டார். அடுத்து பவா செல்லதுரை, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா ஆகியோர் வெளியேறினர்.

இதற்கிடையில் வைல்டு கார்டு மூலம் தினேஷ், கானா பாலா, பிராவோ, அர்ச்சனா, அன்ன பாரதி என 5 புதிய போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றனர். இவர்களுள் பட்டிமன்ற பேச்சாளரான அன்னபாரதி நேற்று எவிக்ட் செய்யப்பட்டார். பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சக போட்டியாளர்களால் குற்றம்சாட்டப்பட்டது.

இதனுடன் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம், ஆபாச வார்த்தைகள் போன்றவற்றால் சர்ச்சையைக் கிளப்பிய பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது.

ஆனால் பிரதீப், பாதியிலேயே பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கு காரணம் பிரதீப் முதல் நாளிலிருந்து தனது இயல்பான குணத்தை காண்பித்து, ரூல்ஸ் படி விளையாடி வந்தார். பெண்களுக்கு பாதிகாப்பில்லை எனக் கூறி பிரதீப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது Unfair என முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட பிக் பாஸ் போட்டியாளர்கள், திரைப்பிரபலங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Bigg Boss 7: know how much Pradeep Antony earned?
பிக்பாஸ் : ஒரே எபிசோடில் ஹாட் டாப்பிக்கான ஜோவிகா விஜயகுமார் - மகளுக்காக வனிதா சொல்வதென்ன?

எவ்வளவு சம்பளம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியில் விளையாடும் அனைவருக்குமே ஒரு நாளைக்கு இத்தனை ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் இறுதியில் பெரிய தொகை ஒன்று சம்பளமாக வழங்கப்படுகிறது.

அதன்படி, பிரதீப்புக்கு பிக்பாஸ் போட்டியில் இருந்த ஒரு நாளைக்கு ரூ. 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளதால் மொத்தம் 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பிரதீப் ஆண்டனி அருவி படம் மூலம் பிரபலமானார். கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். படம் இயக்க வேண்டும் என்ற கனவோடு இருந்த இவருக்கு, பெரிய மேடையாக பிக்பாஸ் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss 7: know how much Pradeep Antony earned?
பிக்பாஸ் வீட்டிலில் முதல் வாரத்திலேயே கவனம் பெறும் எழுத்தாளர் - யார் இந்த பவா செல்லதுரை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com