பிக்பாஸ் : ஒரே எபிசோடில் ஹாட் டாப்பிக்கான ஜோவிகா விஜயகுமார் - மகளுக்காக வனிதா சொல்வதென்ன?

படிப்பு வரலேனா சாவு முடிவு இல்லை .உங்கள் வாழ்க்கை மிகவும் முக்கியமானது. சமூகம் மற்றும் கல்வியின் அழுத்தத்தால் உங்கள் குழந்தையை நீங்கள் இழந்தால் அதைவிட பரிதாபமான விஷயம் வேறு எதுவும் இல்லை எனவும் தனது மகள் பேசியதற்கு சோஷியல் மீடியாவில் மல்லுக் கட்டி வருகிறார் வனிதா.
பிக்பாஸ் : ஒரே எபிசோடு மூலம் ஹாட் டாப்பிக் ஆக மாறிய ஜோவிகா - மகளுக்காக வனிதா சொல்வதென்ன?
பிக்பாஸ் : ஒரே எபிசோடு மூலம் ஹாட் டாப்பிக் ஆக மாறிய ஜோவிகா - மகளுக்காக வனிதா சொல்வதென்ன?Twitter
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதல் வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டிற்குள் சக போட்டியாளர்களின் மத்தியில் விவாதங்கள் அனல் பறக்க ஆரம்பித்தன.

18 போட்டியாளர்களில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் களமிறங்கியுள்ளார். நேற்றைய ஒரே எபிசோடு மூலம் சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக் ஆக மாறி இருக்கிறார் ஜோவிகா. அப்படி என்ன நடந்தது?

முதலில் தங்களின் ப்ரொஃபைல் பற்றி பேசினர், அப்போது ஜோவிகா தான் 9வது வரை தான் படித்திருப்பதாக கூறினார், அதற்கு விசித்ரா கண்டிப்பாக 12வது வரைக்கும் படிக்க வேண்டும் என்றார்.

விசித்ரா அடிப்படை கல்வி அவசியம் என சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய ஜோவிகா, தனக்கு படிப்பு வராததால் தான் பிடித்ததை செய்வதாக கூறி சண்டை போட்டது தற்போது சோசியல் மீடியாவில் விவாத பொருளாக மாறி உள்ளது.

அடிப்படை கல்வி தேவை என விசித்ரா ஜோவிகாவிடம் பேச ஆரம்பிக்க, படிக்க கஷ்டப்பட்டு தற்கொலை செய்துக் கொள்ளணுமா என ஜோவிகா எரிந்து விழுந்து விசித்ராவிடம் சண்டை போட்டது சோஷியல் மீடியாவிலும் எதிரொலித்துள்ளது.

அடிப்படை கல்வி 12வது வரை மாணவர்கள் படிக்க வேண்டியது அவசியம் என ஒரு தரப்பினரும், பள்ளியில் சென்று படிப்பது மட்டும் தான் கல்வி என நினைத்துக் கொண்டிருப்பது சரியான ஒன்று அல்ல என மற்றொரு தரப்பினர் ஜோவிகாவுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் : ஒரே எபிசோடு மூலம் ஹாட் டாப்பிக் ஆக மாறிய ஜோவிகா - மகளுக்காக வனிதா சொல்வதென்ன?
பிக்பாஸ் வீட்டிலில் முதல் வாரத்திலேயே கவனம் பெறும் எழுத்தாளர் - யார் இந்த பவா செல்லதுரை?

இந்நிலையில், வனிதா விஜயகுமார் தனது மகள் படிப்புக்கு எதிராக பேசவில்லை என்றும் படிக்க பிடிக்காதவர்களை ஃபோர்ஸ் பண்ணுவது தான் தப்பு எனக் கூறியுள்ளார் என்றும் படிப்பு வரலேனா சாவு முடிவு இல்லை. உங்கள் வாழ்க்கை மிகவும் முக்கியமானது. சமூகம் மற்றும் கல்வியின் அழுத்தத்தால் உங்கள் குழந்தையை நீங்கள் இழந்தால் அதைவிட பரிதாபமான விஷயம் வேறு எதுவும் இல்லை எனவும் தனது மகள் பேசியதற்கு சோஷியல் மீடியாவில் மல்லுக் கட்டி வருகிறார் வனிதா.

இதற்கிடையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இளம் போட்டியாளராக இருந்து வரும் ஜோவிகா, முதல் வாரத்திலேயே நாமினேட் ஆகி இருக்கிறார். அவரை அதிகபட்சமாக 4 பேர் நாமினேட் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இரவு நிகழ்ச்சியில் கமல் என்ன சொல்லப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் : ஒரே எபிசோடு மூலம் ஹாட் டாப்பிக் ஆக மாறிய ஜோவிகா - மகளுக்காக வனிதா சொல்வதென்ன?
KFC : கோழியா? காக்காவா? - கொந்தளித்த வனிதா விஜயகுமார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com