நயன்தாராவுடன் கைக்கோர்த்துள்ள பிக் பாஸ் பூர்ணிமா ரவி - வைரல் போஸ்டரின் பின்னணி என்ன?
நயன்தாராவுடன் கைக்கோர்த்துள்ள பிக் பாஸ் பூர்ணிமா ரவி - வைரல் போஸ்டரின் பின்னணி என்ன?Twitter

நயன்தாராவுடன் கைகோர்த்துள்ள பிக் பாஸ் பூர்ணிமா ரவி - வைரல் போஸ்டரின் பின்னணி என்ன?

பூர்ணிமா ரவி ஏற்கனவே யூடியூப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். நிறைய வெப் தொடர்களில் நடித்துள்ளார். அராத்தியாக இளசுகளின் மனதில் இடம் பிடித்த பூர்ணிமா, தற்போது பிக் பாஸ் ஷோவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

நடிகை நயன்தாராவின் 75ஆவது படமான அன்னபூரணி படத்தில் பிக்பாஸ் பூர்ணிமா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் ‘அன்னபூரணி’ படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கார்த்திக் குமார், கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் யூடியூப் பிரபலமாக வளர்ந்து வரும் பிக்பாஸ் பூர்ணிமா, முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக படக்குழு பகிர்ந்த அதிகாரப்பூர்வ போஸ்டரும் வைரலாகி வருகிறது.

வரும் டிசம்பர் 1ஆம் தேதி அன்னபூரணி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூர்ணிமா ரவி ஏற்கனவே யூடியூப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். நிறைய வெப் தொடர்களில் நடித்துள்ளார். அராத்தியாக இளசுகளின் மனதில் இடம் பிடித்த பூர்ணிமா, தற்போது பிக் பாஸ் ஷோவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

யார் இந்த பூர்ணிமா ரவி?

வேலூர் மாவட்டத்தில் பிறந்த பூர்ணிமா ரவி, தனது பள்ளி படிப்பை அங்கேயே முடித்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஐ.டி துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

மாதம் 25000 ரூபாய்க்கு வேலை செய்துவந்துள்ள பூர்ணிமா, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு, இணையத்தள யூடியூப் சேனல் ஒன்றிற்கு பார்ட் டைம்மாக நடித்துகொடுத்து வந்துள்ளார்.

நயன்தாராவுடன் கைக்கோர்த்துள்ள பிக் பாஸ் பூர்ணிமா ரவி - வைரல் போஸ்டரின் பின்னணி என்ன?
ஜவான் படத்திற்காக ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அதன் பின்னர் யூடியூப் மூலம் பிரபலமான பூர்ணிமா ரவி தனது ஐடி வேலையை விட்டுவிட்டு சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளார்.

சின்னத்திரையோடு நிறுத்திவிடாமல் நடிகர் ரியோ ராஜ் நடித்த பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்தில் நடித்து வெள்ளித்திரையில் நுழைந்தார். இப்படத்தில் இவர் நடிகர் பாலா சரவணனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று தமிழ் திரையுலகில் பலர் மத்தியில் இன்னும் அறிமுகமாகியிருக்கிறார் பூர்ணிமா ரவி. ஆனால் பிக்பாஸில் கலந்துக்கொள்வதற்கு முன்பாகவே பூர்ணிமா நயன்தாராவின் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவுடன் கைக்கோர்த்துள்ள பிக் பாஸ் பூர்ணிமா ரவி - வைரல் போஸ்டரின் பின்னணி என்ன?
நயன்தாரா முதல் தீபிகா வரை - புடவைக் கட்டிவிட ரூ.2 லட்சம் வாங்கும் Dolly Jain - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com