Bigg Boss 7 : வைல்ட் கார்ட் எண்டரியில் நுழையும் 5 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

இந்த வாரம் இரண்டு எவிக்‌ஷன் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பிக்பாஸ் போட்டியில் இருந்து யுகேந்திரன், வினுஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பிக் பாஸ் 7 போட்டிக்குள் வைல்ட் கார்ட் மூலமாக புதிதாக 5 போட்டியாளர்கள் நுழைய இருக்கின்றனர்.
Bigg Boss Tamil 7: Meet The Wild Card Contestants Set To Enter The House
Bigg Boss Tamil 7: Meet The Wild Card Contestants Set To Enter The HouseTwitter
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

இந்த ஆண்டு, பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக, வீடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஐசு , ஜோவிகா , அக்ஷயா உதயகுமார், அனன்யா எஸ் ராவ், விஜய் வர்மா, விஷ்ணு விஜய், பாவா செல்லதுரை, விசித்ரா, சரவண விக்ரம் , மாயா கிருஷ்ணன், மணி சந்திரா, விஷ்ணு தேவி, பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா , யுகேந்திரன் வாசுதேவன், கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, நிக்சன் ஆகியோர் போட்டியில் கலந்துகொண்டனர்.

முதல் வாரத்திலேயே அனன்யா போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அடுத்து உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் பவா செல்லதுரை அவரே போட்டியிலிருந்து வெளியேறினார்.

கடந்த வாரம் விஜய் வர்மா எவிக்ட் ஆனார். இந்த வாரம் இரண்டு எவிக்‌ஷன் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பிக்பாஸ் போட்டியில் இருந்து யுகேந்திரன், வினுஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் 7 போட்டிக்குள் வைல்ட் கார்ட் மூலமாக புதிதாக 5 போட்டியாளர்கள் நுழைய இருக்கின்றனர்.

Bigg Boss Tamil 7: Meet The Wild Card Contestants Set To Enter The House
Bigg Boss 7: திடீரென வீட்டை விட்டு வெளியேறிய எழுத்தாளர் பவா செல்லதுறை - என்ன காரணம்?

சினிமா பாடகர், ‘கானா பாலா’ நுழைய உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியான வி.ஜே அர்ச்சனாவும் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைய உள்ளாராம்.

தினேஷ் கோபால்சாமி, அன்ன பாரதி, விஜே பிரவோ ஆகியோர் பிக்பாஸிற்குள் வைல்ட் கார்ட் மூலம் போட்டியாளர்களாக நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com