Bigg Boss 7 : பூர்ணிமா இல்லை; இந்த வாரம் Evict ஆக போவது யார் தெரியுமா?

ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இந்த வாரம் பூர்ணிமா தான் வெளியேறவுள்ளார் என்று முதலில் செய்தி வெளியானது. ஆனால் இந்த வாரம்...
Bigg Boss 7 : பூர்ணிமா இல்லை; இந்த வாரம் Evict ஆக போவது யார் தெரியுமா?
Bigg Boss 7 : பூர்ணிமா இல்லை; இந்த வாரம் Evict ஆக போவது யார் தெரியுமா? Twitter

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

இந்த ஆண்டு, பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக வீடு, இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டதால் சீசன் கூடுதல் கவனம் பெற்று வருகிறது. இந்த சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது .

தற்போது போட்டியில் ஐஷு , ஜோவிகா , அக்ஷயா உதயகுமார், விஷ்ணு விஜய், விசித்ரா, சரவண விக்ரம் , மாயா கிருஷ்ணன், மணி சந்திரா, பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா, கூல் சுரேஷ், நிக்சன், தினேஷ், கானா பாலா, பிராவோ, அர்ச்சனா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கிய முதல் வாரத்திலேயே அனன்யா போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அடுத்து உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் பவா செல்லதுரை அவரே போட்டியிலிருந்து வெளியேறினார்.

அடுத்து விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா, அன்ன பாரதி, ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினர்.

இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும் பிரதீப் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார் என்று சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு குரல் அதிகரித்து வந்தது.

Bigg Boss 7 : பூர்ணிமா இல்லை; இந்த வாரம் Evict ஆக போவது யார் தெரியுமா?
ஜோவிகா முதல் கூல் சுரேஷ் வரை - பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நேற்றைய எபிசோடில் சக போட்டியாளர்கள் சொன்னத்தின் அடிப்படையில் பிரதீப் வெளியேற்றப்பட்டதாகவும், தீர விசாரித்தே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கமல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

இந்த வாரம் பூர்ணிமா தான் வெளியேறவுள்ளார் என்று முதலில் செய்தி வெளியானது. ஆனால் இந்த வாரம் ஐஷு தான் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது.

Bigg Boss 7 : பூர்ணிமா இல்லை; இந்த வாரம் Evict ஆக போவது யார் தெரியுமா?
பிக்பாஸ் வீட்டிலில் முதல் வாரத்திலேயே கவனம் பெறும் எழுத்தாளர் - யார் இந்த பவா செல்லதுரை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com