Mahesh Babu : பாலிவுட்டில் நடித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை - நடிகர் கருத்து

பாலிவுட்டிலிருந்து தனக்கு பட வாய்ப்புகள் வந்ததாகவும், ஆனால் தனக்கு ஈடுகட்ட முடியாத துறையினருடன் வேலை செய்து தன் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும், சமீபத்தில் நடந்த மேஜர் திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
Mahesh Babu
Mahesh BabuTwitter
Published on

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் முன்னனி நடிகர் மகேஷ் பாபு. இவர் தயாரிப்பாளர் கிருஷ்ணாவின் மகன். இவரது படங்கள் தெலுங்கில் மட்டுமல்லாமல், தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் டப் செய்து வெளியாகும். அப்படி பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.

சமீபத்தில், அடிவி ஷேஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் மேஜர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மகேஷ்பாபு பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தனக்கு பாலிவுட்டில் இருந்தும் நிறைய பட வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது, இருந்தாலும் நடிக்க விருப்பமில்லாததால் மறுத்துவிட்டதாக குறிப்பிட்டார்.

Mahesh Babu
Mahesh BabuTwitter

"பாலிவுட்டில் என்னால் ஈடு கொடுக்க முடியும் என்று தோன்றவில்லை. அப்படிப்பட்டவர்களோடு வேலை செய்து என் நேரத்தை வீணடிக்க எனக்கு விருப்பமில்லை" என்றும் ஓபனாக பேசியிருக்கிறார் மகேஷ்பாபு. மேலும், தனக்கு தென்னிந்திய திரைத்துறையில் அளவுக்கு அதிகமாக கிடைக்கும் அன்பு, மரியாதை, அங்கீகாரத்தை விட்டுவிட்டு, வேறு இன்டஸ்ட்ரிக்கு செல்லும் எண்ணமும் இல்லை என்று குறிப்பிட்டார்.

இந்திய சினிமா என்று வகைப்படுத்தும் கோட்பாடுகள் இன்றைய நிலையில் மங்கிக்கொண்டு வருவதும், எந்த பாஷையில் வெளியாகும் படமாக இருந்தாலும், ரசிகர்கள் அதற்கான அங்கீகாரத்தை அளித்து வருவதால், மேன்மேலும் தெலுங்கு படங்கள் நடிக்கவே தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

"தெலுங்கு படங்கள் நடித்தாலே அது இந்தியா முழுவதும் பேசப்படும்" என்றார்.

Mahesh Babu
Mahesh BabuTwitter

அடிவி ஷேஷ் நடித்திருக்கும் இந்த மேஜர் திரைப்படம், 2008ல் மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்த ராணுவ வீரர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் வாழ்க்கை படமாகும். சசி கிரண் டிக்கா இயக்கும் இந்த படத்தை சோனி நிறுவனம், மகேஷ் பாபுவின் ஜிஎம்பி என்டெர்டெய்ன்மென்ட், A+S மூவீஸ் இணைந்து தயாரிக்கிறது.

மகேஷ் பாபு நடிப்பில் அடுத்து சர்காரு வாரி பாட்டா எனும் படம் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது

Mahesh Babu
Thalapathy 66: வலிமையை மிஸ் செய்த நடிகை விஜயுடன் தளபதி 66ல் இணைகிறார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com