ராம் சரண் - சிரஞ்சீவி
ராம் சரண் - சிரஞ்சீவிடிவிட்டர்

Acharya: சம்பளத்தை திருப்பி தந்த சிரஞ்சீவி, ராம் சரண் - ஏன்?

ஆனால் இதற்காக தனக்கு குற்ற உணர்ச்சி இல்லை எனக் கூறியவர் தானும், மகன் ராம் சரணும் இந்த படத்திற்காக வாங்கிய சம்பளத்திலிருந்து 80 சதவிகிதத்தை தயாரிப்பாளரிடம் திருப்பிக்கொடுத்து விட்டதாக தெரிவித்தார்.
Published on

ஆச்சார்யா படம் வெளியாகி பெரிய வரவேற்பு ஏதும் பெறாததால், தங்கள் சம்பளத்தை திருப்பி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர் நடிகர்கள் ராம் சரண் மற்றும் சிரஞ்சீவி.

கொரடாலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி அவரது மகன் ராம் சரண் இனைந்து நடித்த படம் ஆச்சார்யா. தந்தை மகன் இணைந்து நடிக்கும் முதல் முழு நீல படம் இது என்பதால் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது இந்த படம்.

ஆனால், படம் தோல்வியடைந்தது. பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் வெறும் 75 கோடி தான் பெற்றிருந்தது. இது படம் தயாரிக்க உருவான செலவில் பாதிக் கூட இல்லை.

சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மெகாஸ்டார் சிரஞ்சீவி, படத்தின் தோல்விக்கு தான் முழு பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். ஆனால் இதற்காக தனக்கு குற்ற உணர்ச்சி இல்லை எனக் கூறியவர் தானும், மகன் ராம் சரணும் இந்த படத்திற்காக வாங்கிய சம்பளத்திலிருந்து 80 சதவிகிதத்தை தயாரிப்பாளரிடம் திருப்பிக்கொடுத்து விட்டதாக தெரிவித்தார்.

ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யவும், அதில் பங்குகொள்ளவும் இதை செய்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்

ராம் சரண் - சிரஞ்சீவி
பொன்னியின் செல்வன்: ஜெயம் ரவியை பாராட்டிய ரஜினி - நெகிழ்ச்சியில் நடிகர் பகிர்ந்த ட்வீட்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com