கோப்ரா 333: விக்ரம் படத்தின் ரன்டைம் இதுதான்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இது தான் பதானுக்கு முதல்படம். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள கோப்ரா திரைப்படம், வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
கோப்ரா
கோப்ராடிவிட்டர்

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கோப்ரா. இரண்டு வருடங்கள் கழித்து விக்ரமின் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கேஜிஎஃப் திரைப்பட நாயகி ஸ்ரீனிதி ஷெட்டி இதில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இது தான் பதானுக்கு முதல்படம். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள கோப்ரா திரைப்படம், வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் விக்ரம் ரசிகர்கள் இத்திரைப்படத்திற்காக காத்திருக்கின்றனர். கோப்ரா படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவிருக்கும் கோப்ரா திரைப்படத்திற்கு தற்போது U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.

மேலும் கோப்ரா திரைப்படத்தின் ரன்டைம் இப்போது வெளியாகியுள்ளது. கோப்ரா திரைப்படத்தின் நீளம் மொத்தம் 3 மணி நேரம், 3 நிமிடம், 3 நொடிகள். இதனால் 333 என்ற எண் வைரலாகி வருகிறது.

கோப்ரா
Cobra Official Trailer : வெளியானது கோப்ரா படத்தின் டிரைலர் | Video

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com