விக்ரமில் பயன்படுத்தப்பட்ட De-aging தொழில்நுட்பம் - காட்சிகள் விரைவில் வெளியீடு

கமல்ஹாசனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், டீ ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார். ஆனால் பணிகள் முடிய நேரம் ஆனதால், அந்த காட்சிகளைப் படத்தில் சேர்க்கமுடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
Kamal Haasan
Kamal Haasantwitter
Published on

கடந்த ஜூன் மூன்றாம் தேதி லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வெளியானது. 1986ல் கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியானதை அடுத்து, அதில் வரும் கமலின் விக்ரம் கதாப்பாத்திரத்தின் நீட்சியாக இந்த கதை அமைந்தது.

படம் வெளியாகி இது வரையிலும் 250 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ரஜினியின் 2.0 படத்துக்கு அடுத்ததாக விரைவாக 250 கோடி வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற இடத்தை விக்ரம் பிடித்துள்ளது.

அந்த அளவு ரசிகர்களின் வரவேற்பு படத்துக்கு கிடைத்தது.

Lokesh Kanagaraj
Lokesh KanagarajTwitter

ரிலீஸுக்கு முன் படம் குறித்த தியரிகள் ஒரு பக்கம் வந்தவண்ணம் இருந்தது. படத்தில், இயக்குநர் லோகேஷ் கமலை இளமையாகக் காண்பிக்க De-aging என்ற டெக்னாலஜியை பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

ஆனால், படத்தில் இளமையான கமல்ஹாசன் வரும் காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. ஒரு வேளை அந்த தொழில்நுட்பத்தை இயக்குநர் பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம், இதுவும் ஃபேன் தியரிக்களில் ஒன்று என அனைவரும் நினைத்தனர்.

Vikram 1986
Vikram 1986Twitter

De-aging டெக்னாலஜி குறித்த இந்த பேச்சுகளுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். படத்தில் டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது உண்மை தான் என்று வாய்மொழிந்திருக்கிறார் லோகி.

இந்த டீ-ஏஜிங் டெக்னாலஜியை வைத்து கமல்ஹாசனின் இளமை தோற்றத்தை படமெடுத்ததாகவும், ஆனால் அதன் வேலைகள் முடிவடையாததால் அவற்றை படத்தில் இணைக்கமுடியாமல் போனதென்றும் கூறியிருக்கிறார் டைரக்டர்.

Kamal Haasan
Vikram Box Office: கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Aacharya- De-aging technology
Aacharya- De-aging technologyTwitter

இந்த டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகளை பின்னர் விக்ரம் எக்ஸ்க்ளூசிவாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். De-aging என்பது, ஒரு நடிகரை திரையில் இளமையாக காண்பிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு VFX முயற்சியாகும்.

தெலுங்கில் சிரஞ்சீவி-ராம் சரண் நடிப்பில் வெளியான ஆச்சார்யா திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan
விக்ரம் : டிரெண்டாகும் 'சக்கு சக்கு வத்திகுச்சி'கு ஹாரிஸ் தான் Programmer!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com