Vikram Box Office: கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் இணைந்து நடித்திருக்கும் இந்த படம் குறுகிய காலத்தில் 100 கோடி வசூல் சாதனையைப் படைக்கும் எனக் கூறப்படுகிறது.
Vikram
VikramTwitter

ஜூன் 3ம் தேதி விக்ரம் படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு விஸ்வரூபம் 2 படத்துக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனுக்கு புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அரசியல் என ரசிகர்களைத் தொடர்பில் வைத்திருந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் அவர்களுக்கு விருந்து வைத்திருக்கிறார் என்று தான் கூறவேண்டும்.

லோகேஷ் கனகராஜின் சம்பவங்களுக்குத் திரையரங்குகளில் வெடித்த கைத்தட்டல்களே படத்தின் வெற்றியை உறுதி செய்தது. இதனால் படத்தின் வசூல் குறித்து அறியவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் இணைந்து நடித்திருக்கும் இந்த படம் குறுகிய காலத்தில் 100 கோடி வசூல் சாதனையைப் படைக்கும் எனக் கூறப்படுகிறது.

சினிமா வர்த்தக ஆய்வாளரான ரமேஷ் பாலா ட்விட்டரில் வெளியிட்ட தகவல்கள் விரைவில் 100 கோடி வசூலை உறுதி செய்திருக்கின்றன. அதே நேரத்தில் மனோ பாலா, 2022ம் ஆண்டு வெளியான படங்களின் வசூல் வரிசையில் முதல் 3 படங்களுக்குள் விக்ரம் இடம் பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.

Vikram
விக்ரம் கமல் : IMDB பரிந்துரைக்கும் கமலின் 30 சிறந்த படங்கள்
Vikram
விக்ரம் படம் எப்படி இருக்கிறது? - திரை பிரபலங்களின் டிவிட்டர் கருத்து

தற்போது மனோபாலா விஜயபாலன் தெரிவித்திருக்கும் தகவல் படி, விக்ரம் திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 20.61 கோடி வருமானம் ஈட்டியிருக்கிறது. இது கொரோனா தொற்றுக்கு பிறகு வெளியான படங்களின் வரிசையில் 4 வது இடத்தைப் பிடிக்கிறது. 2022ம் ஆண்டில் வெளியான படங்களில் 3 வது இடமும் பிடித்திருக்கிறது.

நடிகர் கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் மிச் சிறந்த முதல்நாள் வசூலும் இது தான் என்கிறார் மனோபாலா.

இத்துடன் ஜூன் 3ல் வெளியான அக்‌ஷய் குமாரின் பிரித்வி ராஜ், மேஜர் போன்ற படங்களை விட இந்திய அளவில் அதிக வசூலாகியிருக்கிறது விக்ரம் திரைப்படம்.

அதே நேரத்தில் சர்வதேச அளவிலும் விக்ரம் வசூல் வேட்டை செய்து வருகிறது.

விக்ரம் படத்தின் திரை விமர்சனம்:

Vikram
Vikram Movie Review: விக்ரம் திரைப்பட விமர்சனம்

விக்ரம் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்:

Vikram
விக்ரம் படத்தில் யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள் தெரியுமா? | Cast and Crew Complete List

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com