ராஷ்மிகா மந்தனாவின் ‘டீப் ஃபேக்’ வீடியோ வைரல் - போலி வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி?

நடிகை ராஷ்மிகா மந்தனா லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று பலரும் இணைத்தில் பகிர்ந்து வந்தனர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்பது தற்போது தெரியவந்துள்ளது. இது போன்ற போலி வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி?
ராஷ்மிகா மந்தனாவின் ‘டீப் ஃபேக்’ வீடியோ வைரல் - போலி வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி?
ராஷ்மிகா மந்தனாவின் ‘டீப் ஃபேக்’ வீடியோ வைரல் - போலி வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி?Twitter

நடிகை ராஷ்மிகா மந்தனா லிஃப்டில் நுழைவதைக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று பலரும் இணைத்தில் பகிர்ந்து வந்தனர்.

ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்பது தற்போது தெரியவந்துள்ளது.

நடிகை ராஷ்மிகா இதுகுறித்து தனது சமூகவலைதள பக்கத்தில்

‘இதைப் பகிர்வதில் நான் மிகவும் வேதனைப்படுகிறேன், என்னுடைய டிப் ஃபேக் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது.

இதுவே நான் பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் போது எனக்கு நடந்துருந்தால், இதை எப்படி சமாளிப்பது என்று என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை” என்று வேதனையுடன் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவிற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைப்பிரபலங்கள் சிலரும் ரஷ்மிகாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

போலி வீடியோக்களை எப்படி கண்டுபிடிப்பது?

இயற்கைக்கு மாறான கண் அசைவுகள்

டீப்ஃபேக் வீடியோக்கள் பெரும்பாலும் இயற்கைக்கு மாறான கண் அசைவுகள் அல்லது பார்வை வடிவங்களை வெளிப்படுத்துகின்றன. உண்மையான வீடியோக்களில், கண் அசைவுகள், பேச்சு மற்றும் செயல்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் இருக்கும்.

நிறம் வேறுப்பட்டதாக இருக்கும்

டீப்ஃபேக் வீடியோக்களில் கலர் டோன்களை மேட்ச் செய்வது கடினமாக இருக்கும்.

அதாவது, முகம் அல்லது சுற்றுப்புறங்களில் கலர் கரைக்‌ஷன் ஏதேனும் இருக்கிறதா? என கவனியுங்கள்.

ராஷ்மிகா மந்தனாவின் ‘டீப் ஃபேக்’ வீடியோ வைரல் - போலி வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி?
ராஷ்மிகா மந்தனா : ரசிகரின் நெஞ்சில் ஆட்டோகிராப் போட்ட நடிகை - இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஆடியோ தரத்தை ஒப்பிடவும்

டீப்ஃபேக் வீடியோக்கள் பெரும்பாலும் AI-உருவாக்கப்பட்ட ஆடியோவைப் பயன்படுத்துகின்றன. காட்சி உள்ளடக்கத்துடன் ஆடியோ தரத்தை ஒப்பிடுக.

உடல் செயல்பாடுகளில் மாற்றம்

டீப்ஃபேக்குகள் சில நேரங்களில் இயற்கைக்கு மாறான உடல் வடிவங்கள் அல்லது அசைவுகளை ஏற்படுத்தலாம். உதாரணமாக, கை கால்கள் மிக நீளமாகவோ அல்லது குறுகியதாகவோ தோன்றலாம். குறிப்பாக உடல் செயல்பாடுகளின் போது இந்த முரண்பாடுகள் இருக்க வாய்ப்புள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com