நானே வருவேன், வாத்தி படங்களை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' - இயக்குநர் யார்?

கேப்டன் மில்லர் 1930-ல் நடக்கும் கேங்ஸ்டர் படம் எனக் கூறப்படுகிறது. தனுஷூக்கு வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.
தனுஷ்
தனுஷ்நானே வருவேன்
Published on

இயக்குநர் அருண்மாதேஸ்வரன் அடுத்ததாக இயக்கவுள்ள கேப்டன் மில்லர் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடிகர் தனுஷ் இணைவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன..

தனுஷ் - செல்வராகவன் காம்போ -வில் நானே வருவேன் படம் உருவாகி வருகிறது. இதனை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது . இதைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் “வாத்தி” படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் தனுஷ். 'தோழி ப்ரேமா', 'ரங் தே' படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இந்த படத்தை இயக்குகிறார். சித்ரா எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கில் சார் என இதற்குப் பெயரிட்டுள்ளனர். இந்த படங்களுக்கான அறிவிப்புகள் ஏற்கெனவே வெளியாகிவிட்டன.

தனுஷ்
தங்கம் மனம் கொண்ட சிங்கம் டா தனுஷ்... பாசத்தை அள்ளி தெளிக்கும் அண்ணன் செல்வராகவன்
சாணிகாயிதம் படபிடிப்பில் அருண் மாத்தேஸ்வரன்,  செல்வராகவன்
சாணிகாயிதம் படபிடிப்பில் அருண் மாத்தேஸ்வரன், செல்வராகவன்Twitter

இவற்றைத் தொடர்ந்து இயக்குநர் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் தனுஷ். அருண்மாதேஸ்வரன் ராக்கி, சாணிகாயிதம் போன்ற படங்களை இயக்கியவர். இந்த படத்துக்குத் தற்காலிகமாக கேப்டன் மில்லர் எனப் பெயரிட்டுள்ளனர். இதனை சத்யஜோதிஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கேப்டன் மில்லர் 1930-ல் நடக்கும் கேங்ஸ்டர் படம் எனக் கூறப்படுகிறது. தனுஷூக்கு வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.

தனுஷ்
Dhanush - Aishwarya விவாகரத்து குறித்து சோகமாக பேசிய எஸ்.ஏ சந்திரசேகர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

தனுஷ்
தமிழ் சினிமா : நிச்சயம் பார்க்க வேண்டிய 50 திரைப்படங்கள் | IMDB பரிந்துரைகள்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com