Jawaan: "உங்களால் 1000 குடும்பங்கள் பயனடைந்தது" - ஷாருக் கானுக்கு நன்றி தெரிவித்த அட்லீ

மேலும் அனிருத்துடன் பார்ட்டி, விஜய் சேதுபதியுடனான உரையாடல், நடிகர் விஜய் அவருக்கு அளித்த அறுசுவை விருந்து குறித்தும் ஷாருக் கான் பதிவிட்டிருந்தார்.
Vijay- Atlee-Shah Rukh Khan
Vijay- Atlee-Shah Rukh KhanTwitter
Published on

நடிகர் ஷாருக் கான் சென்னையில் இருந்தபோது அவரால் 1000 குடும்பங்கள் பயனடைந்ததாக இயக்குநர் அட்லீ தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் அட்லீ. தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஜவான் படத்தில் நயன்தாரா மற்றும் தீபிகா படுகோனே முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்காக 30 நாட்கள் சென்னையில் படபிடிப்பு நடந்தது.

Vijay- Atlee-Shah Rukh Khan
Ponniyin Selvan: வந்தியத்தேவனாக விஜய்? இயக்குநர் சாய்ஸ் இவர்கள் தான்- ஜெயமோகன் கூறியதென்ன?

தனது சென்னை அனுபவத்தை ஷாருக் கான் டிவிட்டரில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் அந்த 30 நாட்கள் சிறப்பாக இருந்ததாகவும், இந்த சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்த்தித்தது குறித்தும் மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார்.

மேலும் அனிருத்துடன் பார்ட்டி, விஜய் சேதுபதியுடனான உரையாடல், நடிகர் விஜய் அவருக்கு அளித்த அறுசுவை விருந்து குறித்தும் ஷாருக் கான் பதிவிட்டிருந்தார்.

"நான் இப்போது சிக்கன் 65 சமைக்க கற்றுக்கொள்ள வேண்டும்" எனவும் தெரிவித்திருந்தார். இந்த ட்வீட்டுக்கு பதிலளித்திருந்தார் இயக்குநர் அட்லீ.

அந்த ட்வீட்டில், "நன்றி சார். நீங்கள் இங்கு வந்தததில் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. என் கரியரில் மறக்க முடியாத ஷூட்டிங் இது. சென்னையில் படப்பிடிப்பு நடந்ததில் உங்களுக்கு என் மனமகிழ்ந்த நன்றி. உங்களால் 1000 குடும்பங்கள் பயனடைந்தது. கிங் எப்போதும் கிங் தான். என் சிரம் தாழ்ந்த நன்றியும் மரியாதைகளும். லவ் யூ சார்" என தெரிவித்திருந்தார்.

படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கவுள்ளதாக தெரிகிறது. விரைவில் உங்களை மும்பையில் சந்திக்கிறேன் எனவும் அட்லீ தெரிவித்திருந்தார்

Vijay- Atlee-Shah Rukh Khan
"தளபதி விஜய் சுவையான உணவளித்தார்"- சென்னை அனுபவங்களை ட்வீட் செய்த ஷாருக் கான்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com