இயக்குநர் அட்லி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து இயக்கும் திரைப்படம் ஜவான். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.
ஜவான் படத்தில் நயன்தாரா மற்றும் தீபிகா படுகோனே முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்காக 30 நாட்கள் சென்னையில் படபிடிப்பு நடந்தது.
சென்னையில் தங்கியிருந்த 30 நாட்கள் அனுபவத்தை ஒரே ட்வீட்டில் வெளிப்படுத்தியுள்ளார் ஷாருக் கான்.
அந்த ட்வீட்டில் 30 நாட்கள் சிறப்பாக இருந்ததாக கூறிய ஷாருக் கான், "தலைவர் (ரஜினிகாந்த்) எங்கள் படப்பிடிப்பு தளத்தை ஆசீர்வதித்தார்... நயந்தாராவுடன் படம் பார்த்தேன். அனிருத்துடன் பார்டி கொண்டாடினோம், விஜய் சேதுபதியும் நானும் தீவிரமாக விவாதித்தோம், தளபதி விஜய் சுவையான உணவளித்தார். சிறப்பாக கவனித்துக் கொண்டதற்கு அட்லி மற்றும் பிரியாவுக்கு நன்றி. நான் இப்போது சிக்கன் 65 ரெசிபி கற்றுக்கொள்ள வேண்டும்" என ட்வீட் செய்துள்ளார்.
சென்னையில் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட படபிடிப்புக்கு தயாராகிவருகிறது ஜவான் படக்குழு.
நடிகர் விஜயுடன் தெறி, மெர்சல், பிகில் படங்களில் பணியாற்றிய அட்லி பாலிவுட்டிலும் தடம் பதிப்பாரா என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust