Dunki - Salaar Controversy: ஷாருக் கானுக்கு தெற்கில் அதிக முக்கியத்துவம் கிடைக்கிறதா?

டன்கி மற்றும் சலார் இரண்டும் பான்-இந்தியா மதிப்பு கொண்ட படங்கள். ஆனால் டன்கி வட இந்தியாவையும் சலார் தென்னிந்தியாவையும் பிரநிதித்துவப்படுத்துவதாக இருக்கிறது. இதனால் இரண்டு திரைப்படத்துக்கும் திரையரங்குகள் ஒதுக்குவதில் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.
Dunki - Salaar Controversy: ஷாருக் கானுக்கு தெற்கில் அதிக முக்கியத்துவம் கிடைக்கிறதா?
Dunki - Salaar Controversy: ஷாருக் கானுக்கு தெற்கில் அதிக முக்கியத்துவம் கிடைக்கிறதா?Twitter
Published on

இந்தியாவின் பிரபலமான நடிகராக அறியப்படுகிறார் ஷாருக் கான். இவர் வெற்றி இயக்குநரான ராஜ்குமார் ஹிராணியுடன் இணைந்து, இன்று வெளியாகியுள்ள திரைப்படம் டன்கி (Dunki).

ஷாருக் கான் ஏற்கெனவே இந்த ஆண்டில் பதான், ஜவான் உள்ளிட்ட ப்ளாக் பஸ்டர்களைக் கொடுத்துள்ளார்.

மறுபுறம் சாகோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் என அடுத்தடுத்து தோல்வி படங்களைக் கொடுத்திருக்கும் பாகுபலி நடிகர் பிரபாஸ் தனது இன்னிங்ஸை மீண்டும் தொடங்க கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீலுடன் இணைந்துள்ள திரைப்படம் தான் "சலார்".

Dunki - Salaar Controversy: ஷாருக் கானுக்கு தெற்கில் அதிக முக்கியத்துவம் கிடைக்கிறதா?
ஷாருக் கான் டு அமிதாப் பச்சன்: அதிக சம்பளம் வாங்கும் பாலிவுட் பிரபலங்களின் Bodyguards

சலார் படத்தில் பிரித்விராஜ், ஸ்ருதி ஹாசன், மீனாக்‌ஷி சௌத்ரி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் நாளை வெளியாக இருக்கிறது.

டன்கி மற்றும் சலார் இரண்டும் பான்-இந்தியா மதிப்பு கொண்ட படங்கள். ஆனால் டன்கி வட இந்தியாவையும் சலார் தென்னிந்தியாவையும் பிரநிதித்துவப்படுத்துவதாக இருக்கிறது. இதனால் இரண்டு திரைப்படத்துக்கும் திரையரங்குகள் ஒதுக்குவதில் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.

டன்கி படத்துக்கு தென்னிந்திய திரையரங்கு நிறுவனங்கள் முன்னுரிமை கொடுப்பதாகவும், அது சலார் படக்குழுவை காயப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Dunki - Salaar Controversy: ஷாருக் கானுக்கு தெற்கில் அதிக முக்கியத்துவம் கிடைக்கிறதா?
Shah Rukh Khan: ’உலகின் செல்வாக்கான நபர்’ முதலிடத்தில் கிங் கான்! பட்டியலில் யார் யார்?

சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் வெள்ளிக்கிழமையும் டன்கி படமே திரையிடப்பட வேண்டும் என அந்த படக்குழு அழுத்தம் கொடுப்பதாகவும் மறுபுறம் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

முதன்மை திரைகளில் டன்கியை வெளியிட்டுள்ள பிவிஆர் ஐனாக்ஸ் மற்றும் மிராஜ் சினிமாஸில் சில பகுதிகளில் தங்களது படத்துக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அதனால் அந்த நிறுவனக்களுக்கு, அந்த பகுதிகளில் தங்கள் படத்தை வெளியிட விரும்பவில்லை எனவும் சலார் பட தயாரிப்பு நிறுவனம் ஹோம்பலே தெரிவித்துள்ளது.

இந்த பிரச்னை குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள மல்டிப்ளக்ஸ் திரையங்குகளை மையப்படுத்தி நடைபெற்று வருகிறது!

Dunki - Salaar Controversy: ஷாருக் கானுக்கு தெற்கில் அதிக முக்கியத்துவம் கிடைக்கிறதா?
Riddhi Kumar Joining Hands with Nidhhi Agerwal and Malavika Mohanan for Prabhas's Next

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com