அதிக பணப்புழக்கம் இருக்கும் துறைகளில் ஒன்று சினிமா. நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என்று இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா என வாய்பிளக்கவைக்கும் அளவு ஒரு ஒரு படத்திற்கும் காசு பார்க்கிறார்கள்.
இவற்றை தவிர விளம்பரங்களோ, மேடை நிகழ்ச்சிகளோ சென்றால் அதற்கும் இவர்களுக்கு பேமன்ட்கள் இருக்கும்.
இந்த சினிமா நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்பது தெரியும், ஆனால் இவர்களின் பாடி கார்டுகளும் அதிக சம்பளம் வாங்குவார்கள் என்பது தெரியுமா?
இந்தியாவில் குறிப்பாக பாலிவுட் நட்சத்திரங்களான சல்மான் கான், ஷாருக் கான் போன்ற உச்ச நட்சத்திரங்கள், தங்களின் பாதுகாப்பிற்காக ஒரு பர்சனல் மெய்காப்பாளரை வைத்திருக்கிறார்கள்.
இந்த மெய்காப்பாளர்களின் சம்பளம் என்ன? யாருடைய பாடி கார்டுக்கு அதிக சம்பளம்?
பாலிவுட்டின் பாட்ஷா என்றழைக்கப்படும் ஷாருக் கான் எப்போதும் தனித்து விடப்படுவதில்லை. இவருக்கு இருக்கும் ஃபேன் பேஸ் அப்படி. இவரது பாடி கார்டின் பெயர் ரவி சிங். இவரது மாத சம்பளம் ரூ.17 லட்சம். ஆண்டுக்கு 2.7 கோடிக்கும் மேல் ஊதியம் பெறுகிறார்.
பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் பாதுகாவலர் ரவி சிங் தான்
ஷாருக் கான் எப்படியோ அப்படி தான் பாலிவுட்டில் சல்மான் கானும். அதிரடி ஆக்ஷன் ஹீரோவான சல்மான் கானிடம் சுமார் 29 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் ஷேரா.
இவர் சல்மான் கான் நடித்த பாடிகார்ட் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் கூட நடித்திருந்தார்.
ஷேராவின் சம்பளம் மாதம் 15 லட்சம் ரூபாய். ஆண்டுக்கு 2 கோடிக்கும் மேல்
பாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சன். தனது உயரம் மற்றும் குரலால் பலரை வசீகரித்தவர். இவரது பாதுகாவலராக பணியாற்றுபவர் ஜித்தேந்திர ஷிண்டே. பல நிகழ்வுகளில் கையில் துப்பாக்கியுடன் அமிதாப்புடன் இவரை பார்த்திருப்போம்.
இவர் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் பெறுகிறார்
பாலிவுட்டின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தீபிகா படுகோன். இவர் தமிழில் நடிகர் ரஜினிகாந்த்துடன் கோச்சடையான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவரது பாதுகாவலர் ஜலால் ஆண்டுக்கு 1.2 கோடி ரூபாய் ஊதியம் பெறுகிறார்
சமயத்தில் இவரது கணவர் விராட் கோலிக்கும் பாதுகாவலராக பணிபுரியும் பிரகாஷ் சிங் ஆண்டுக்கு 1.2 கோடி சம்பளம் பெறுகிறார்
இவரது பாதுகாவலர் ஷ்ரேசே தேலே பல ஆண்டுகளாக அக்ஷய் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாடிகார்ட் ஆக வேலை செய்து வருகிறார். இவரும் ஆண்டுக்கு 1.2 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக அறிக்கைகள் கூறுகின்றன
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust