இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
தேனி மாவட்டம், வருஷநாடு பசுமலையை பூர்வீகமாக கொண்டவர் நடிகர் மாரிமுத்து. திரைத்துறையில் பணியாற்ற விரும்பி சென்னைக்கு வந்த பின்னர், கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றினார். அதன் பிறகு உதவி இயக்குநராக பணியாற்றினார்.
ராஜ்கிரண், சீமான், மணிரத்னம், வசந்த், சிம்பு உள்ளிட்டவர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார் மாரிமுத்து.
அதனை தொடர்ந்து 2011ல் யுத்தம் செய் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ‘ஆதி குணசேகரன்’ கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் மாரிமுத்து.
இந்த கதாபாத்திரம் இவருக்கு பெரும் புகழை தேடித் தந்தது. தவிர, இவரது முற்போக்கு சிந்தனைகளுக்காகவும், நகைச்சுவை பேச்சுக்காகவும் தனி மனிதனாக மாரிமுத்து பல ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில், இன்று டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் செல்லப்பட்டார் மாரிமுத்து. ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தற்போது அவரது உடல் வடபழனி மருத்துவமனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
அவரது திடீர் மறைவு சின்னத்திரை நடிகர்கள், ரசிகர்கள் என பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாரிமுத்துவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust