eramana rojave  2
eramana rojave 2Twitter

ஈரமான ரோஜாவே 2 : புகுந்த வீட்டில் சுயரூபத்தை காட்டும் காவ்யா - சூடுபிடிக்கும் சீரியல்

தன் அக்கா அவமானப்படுவதைப் பார்த்துப் பொங்கி எழும் காவ்யா, ``ஹலோ நாங்க என் மாமனார், மாமியாருக்கு மருமகள்களா தான் வந்திருக்கோம். வேலைக்காரியா இல்ல’’ என்று முகத்தில் அறைந்தது போல் சொல்கிறார். இனி சீரியல் ரேட்டிங் அதிகரிக்கும் என்று நம்பலாம்!
Published on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே-2 தொடர் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. விருப்பமில்லாத திருமணப் பந்தத்தில் இணையும் இரு ஜோடிகள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பி, வீட்டாரோடு உறவாட ஆரம்பித்துள்ளனர்.

‘ஈரமான ரோஜாவே’ முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஈரமான ரோஜாவே -2 தொடர் வெளியானது. வேறொரு வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும் என்று பார்த்தால் மீண்டும் அதே ஜோடி மாறிப் போன கதை தான். சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே கதை. அதே உருட்டு. எனவே இந்த பாகம் டி.ஆர்.பி-யில் கூட பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. மூன்று நாயகன் (அண்ணன் தம்பிகள்), மூன்று நாயகிகள்(அக்கா தங்கைகள்). இவர்களுக்குள் விதி எப்படி முடிச்சு போடுகிறது என்பது தான் கதையின் ஒன்லைன்.

நாயகன் நாயகியின் தந்தைகள் இருவருமே நல்ல நண்பர்கள். இவையனைத்தும் அப்படியே முதல் பாகத்தின் கதை தான். பொதுவாக இரண்டாம் பாகம் எடுக்கும்போது, முதல் பாகத்தின் தொடர்ச்சியாகத் தான் எடுப்பார்கள். ஆனால் இந்த சீரியலில் அப்படியே கேரக்டர்களை மட்டும் மாற்றி இரண்டாம் பாகம் எடுத்துள்ளனர்.

eramana rojave  2
eramana rojave 2Twitter

போன வார எபிசோடுகளில் காவ்யாவும் (கேபி), ஜீவாவும் (திரவியம்), காதலித்த விஷயம் காவ்யாவின் அம்மாவுக்குத் தெரிந்து விட, நம் சுயநலத்துக்காக மகளின் வாழ்க்கையைத் தியாகம் செய்து விட்டோமே என்று புலம்புகிறார். இரண்டு ஜோடிகளும் மறு வீட்டுக்கு வருகின்றனர்.காவ்யா அனைவரிடமும் ஒட்டாமல் இருக்கிறார். மறுவீட்டு விருந்து முடிந்து கிளம்பும் போது, காவ்யா மாமியார் வீட்டுக்குச் செல்ல மறுக்கிறார். காவ்யாவின் அம்மா தனியாக அழைத்துச் சென்று மீண்டும் எமோஷனல் பிளாக்மெயில் செய்கிறார். அம்மாவுக்காக காவ்யா மாமியார் வீட்டுக்குச் செல்ல சம்மதிக்கிறார்.

eramana rojave  2
பீகார் : கல்லூரி வாசலில் டீ விற்கும் பட்டதாரி இளம்பெண் பிரியங்கா
eramana rojave  2
eramana rojave 2

மணப்பெண்கள் வீட்டிலிருந்து மறுவீட்டுச் சீதனமாக நிறையப் பலகாரங்களைக் கொடுத்து அனுப்புகிறார்கள். மாப்பிள்ளை வீட்டில் பலகாரங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். இரண்டு மாப்பிள்ளைகளுக்குப் பிடித்த ஸ்வீட்டை தனித் தனியாகச் செய்து அனுப்புகிறார்கள், அதைப் பார்த்து காவ்யாவும், ஜீவாவும் ஒருவரை ஒருவர் ஏக்கத்துடன் பார்த்துக் கொள்கின்றனர். அந்த பார்வைக்கு என்ன அர்த்தம் என்று டிகோட் செய்து பார்த்ததில், ``பிடித்த ஸ்வீட் செஞ்சு கொடுத்து என்ன பிரயோஜனம், பிடித்த நபரைத் திருமணம் செய்து கொடுக்கவில்லை என்பது தான்.

இனி வரும் எபிசோடுகளில்,காவ்யா மாமனார் வீட்டில் வில்லத்தனம் செய்பவர்களைத் துவம்சம் செய்யப் போகிறார் போலும். இன்றைய எபிசோடில் காவ்யாவின் அக்கா பலகாரம் எடுத்துக் கொண்டு போய் மாமனாரின் தங்கை குடும்பத்தினருக்குக் கொடுக்கிறார். அங்கு அவரை அவமானப் படுத்துகின்றனர். நிச்சயதார்த்தம் ஒருவருடன் திருமணம் இன்னொருவருடனா? என்று கிண்டல் செய்கின்றனர்.

eramana rojave  2
eramana rojave 2Twitter

மேலும் எச்சி கிளாசை எடுத்துக் கொண்டு போய் கிச்சனில் வைக்கச் சொல்லி மிரட்டுகிறார்கள். தன் அக்கா அவமானப்படுவதைப் பார்த்துப் பொங்கி எழும் காவ்யா, ``ஹலோ நாங்க என் மாமனார், மாமியாருக்கு மருமகள்களா தான் வந்திருக்கோம். வேலைக்காரியா இல்ல’’ என்று முகத்தில் அறைந்தது போல் சொல்கிறார். காவ்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் கேபி சமயத்தில் ஓவர் ஆக்டிங் செய்தாலும், பல சமயம் சூப்பராக நடித்து அசத்துகிறார். இப்போது தான் கதை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இனி சீரியல் ரேட்டிங் அதிகரிக்கும் என்று நம்பலாம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

eramana rojave  2
KGF Quiz : கேஜிஎஃப் 2 திரைப்படம் பற்றி என்னென்ன தெரியும் உங்களுக்கு?
logo
Newssense
newssense.vikatan.com