பாரதி கண்ணம்மா Serial : கமெண்டில் கண்டபடி கழுவி ஊற்றும் ரசிகர்கள்

பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்குறத தவற மத்த எல்லா வேலையையும் இந்த டைரக்டர் பண்ணுவாரு, அடுத்து அதே ஹாஸ்பிடல்ல கண்ணம்மா டாக்டரா வந்தாலும் ஆச்சர்யப்பட முடியாது.எத்தனை மருத்துவமனை கட்டுற நீங்க ஒரே ஒரு DNA test மட்டும் எடுக்கமாட்டிங்றீங்களே ஏன்?
Bharathi Kannamma
Bharathi KannammaTwitter
Published on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து பல வாரங்களாக டிஆர்பியில் டாப் ஐந்து இடங்களில் வந்துவிடுகிறது. இந்த சீரியலுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு ஹேட்டர்ஸ் இருக்கிறார்கள்.

கருப்பான, அழகான, திறமை வாய்ந்த நாயகி. அவரின் நடத்தை மீது சந்தேகிக்கும் நாயகன். நாயகிக்கு இரட்டை குழந்தை பிறக்கிறது. நாயகனுக்கு குழந்தை பெற்று கொள்ளும் பாக்கியம் இல்லை என்று ஒரு பொய் ரிப்போர்ட்டை வில்லி வெண்பா கொடுத்து விடுகிறார்.

இதனால் நாயகன் பாரதி தன் மனைவி கண்ணம்மாவை சந்தேகிக்கிறார். DNA டெஸ்ட் எடுங்கள் என்று கண்ணம்மா கேட்கிறார். ஆனால் பாரதி சம்மதிக்கவில்லை. இப்படியே பல வருடங்களாக சீரியலை ஓட்டி வருகிறார் இயக்குனர் பிரவீன் பென்னட்.

Bharathi Kannamma
Bharathi KannammaTwitter

DNA டெஸ்ட் எடுத்தால் தான் என்னவாம்? என்று ரசிகர்கள் ஒவ்வொரு ப்ரோமோ வீடியோவில் கேட்கின்றனர். விஜய் டிவியின் யூ டியூப் பாரதி கண்ணம்மா சமீபத்திய புரோமோ டிரென்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது. இருதய நிபுணரான பாரதி, ஒரு குழந்தைக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்கிறார். இந்த ப்ரோமோ வுக்கு வந்த சில கலாய் கமெண்ட்டுகளை இங்கே பகிர்கிறோம்…

இந்த சீரியல் முடியும் போது நம்ம செவ்வாய் கிரகத்தில் இருப்போம். இந்த சீரியல் பாக்கறவங்களுக்கு தான் heart operation செய்யனும்

மனிதாபிமான அவார்ட் எதுக்கு குடுத்தாங்கன்னு யாரும் கேட்க கூடாது ன்னு தான் இப்போ இந்த சீன் வருது

கதை ஒரு பக்கம் போகும்... நாம ஒரு பக்கம் போவோம் DNA test எடுக்குறதை தவிர மத்த எல்லாம் பண்ணுவாய்ங்க புரோமா பாக்குற எனக்கே இப்படி இருக்குன்னா சீரியல் பாக்குறவுங்க நிலைமை என்னவாகும்

விவேக் : டேய் கண்ணா பாரதினா யாருடா சொல்லு பாக்கலாம்

பையன் : dna test எடுக்கமா கண்ணம்மா மேல சந்தேக ப்படுற ஆள் மாமா

விவேக் : அடப்பாவிகளா பாரதி பேரையே damage பண்ணிடீங்களா

டைரக்டருக்கு எப்படி கதை கொண்டு போறதுன்னு தெரியலை.அதனால அவர் பார்த்த எல்லா தமிழ்ப் படங்களிலிருந்தும் ஒவ்வொரு சீன் எடுத்து ஒரு வார எபிசோடா மாத்திட்டிருக்காரு.. நல்லா வருவீங்க சார்ர்ர்ர்ர்ர்

Bharathi Kannamma
Bharathi KannammaTwitter

பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்குறத தவற மத்த எல்லா வேலையையும் இந்த டைரக்டர் பண்ணுவாரு

அடுத்து அதே ஹாஸ்பிடல்ல கண்ணம்மா டாக்டரா வந்தாலும் ஆச்சர்யப்பட இல்ல

எத்தனை மருத்துவமனை கட்டுற நீங்க ஒரே ஒரு DNA test மட்டும் எடுக்கமாட்டிங்றீங்களே ஏன்

உலகமே அழிஞ்சி மறு உலகம் உருவானாலும் அங்கேயும் ஒருத்தி உக்காந்து மாவு அரைச்சிக்கிட்டு இருப்பா அவதான் கண்ணம்மா

Bharathi Kannamma
குடும்பத்துக்காக இரவு பகலாக உழைக்கும் `பாரதி கண்ணம்மா’ வினுஷா! - சுவாரஸ்ய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com