குடும்பத்துக்காக இரவு பகலாக உழைக்கும் `பாரதி கண்ணம்மா’ வினுஷா! - சுவாரஸ்ய தகவல்கள்

வினுஷா தன் அம்மா மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார். சினிமாவில் நடிக்க முயற்சி செய்யப் போவதாக வினுஷா வீட்டில் சொன்னதும், அவரின் அம்மாவும், பாட்டியும் அழுது புலம்பி வேண்டாம் என்று சொன்னார்களாம். பின்னர் சமாதானப்படுத்தி புரிய வைத்திருக்கிறார் வினுஷா.
`பாரதி கண்ணம்மா’ வினுஷா

`பாரதி கண்ணம்மா’ வினுஷா

Instagram

Published on
  1. வினுஷா கடின உழைப்பாளி. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பாரதி கண்ணம்மா ஷூட்டிங். அதன் பிறகு ஐடி வேலை. இரவு 10 மணிக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் login செய்து நள்ளிரவு வரை பணி தொடரும். சாதாரண குடும்ப பின்னணியை கொண்ட வினுஷா தான் முழுமையாக தன் வீட்டை பார்த்து கொள்கிறார். எனவே குடும்பத்துக்காக இரவு பகல் பாராமல் பணிபுரிகிறார்.

  2. வினுஷா தன் அம்மா மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார். சினிமாவில் நடிக்க முயற்சி செய்யப் போவதாக வினுஷா வீட்டில் சொன்னதும், அவரின் அம்மாவும், பாட்டியும் அழுது புலம்பி வேண்டாம் என்று சொன்னார்களாம். பின்னர் சமாதானப்படுத்தி புரிய வைத்திருக்கிறார் வினுஷா.

  3. சினிமா என்றதும் ஆரம்பத்தில் நோ சொன்ன வினுஷாவின் அம்மா, பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்ததும், தயங்காமல் தன் மகளுக்கு கிரீன் சிக்னல் காட்டிவிட்டாராம். காரணம் இந்த சீரியலின் கண்ணம்மா கதாபாத்திரத்தின் துயரக் கதை, வினுஷா அம்மாவின் வாழ்க்கையுடன் கொஞ்சம் ஒத்து போகும்படி இருப்பதால் எமோஷனல் ஆக பாரதி கண்ணம்மா சீரியல் அவர்களுக்கு பிடிக்குமாம்!

  4. வினுஷாவின் ரோல் மாடல் நாயகி நந்திதா தாஸ்.

  5. வினுஷா பிறந்தது அரக்கோணம். வளர்ந்தது சென்னை, பெற்றோர் பூர்வீகம் ராணிப்பேட்டை.

<div class="paragraphs"><p>`பாரதி கண்ணம்மா’ வினுஷா</p></div>
பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி : ``இவருக்கு பதில் இவர்’ - தொடரும் சீரியல் குழப்பங்கள்

Instagram

6. வினுஷாவும் சுந்தரி சீரியல் நாயகி கேப்ரில்லா-வும் நெருங்கிய தோழிகள். இருவரும் ஒரே நாடக குழுவில் பெர்பார்ம் செய்துள்ளனர். வினுஷா கேபி-யை உடன் பிறவா அக்கா என்று தான் இன்டர்வியூ களில் குறிப்பிடுகிறார்.

7. வினுஷா N4 எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில், கேபிரியல்லா, டிக் டாக் புகழ் அக்‌ஷய் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்கள்.

8. வினுஷா தனுஷின் தீவிர ரசிகை.

Instagram

9. சீரியல் ஷூட்டிங்கிற்கு வினுஷாவின் பாட்டி தினமும் அவருடன் வருவாராம். இரவு ஷூட்டிங் முடியும் வரை கூடவே இருப்பாராம்.

10. பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரூபா, வினுஷாவின் ஆல் டைம் ஃபேவரைட். இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் செம லூட்டி அடிப்பார்கள்.

<div class="paragraphs"><p>`பாரதி கண்ணம்மா’ வினுஷா</p></div>
பாக்கியலட்சுமி நேஹா வீட்டில் விசேஷம்! - ஒன்று கூடிய சீரியல் குழு

NewsSense

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com