டக்கர் முதல் ஃபர்ஹானா வரை - இந்த வீக்கெண்டில் என்ன படம் பார்க்க போகிறீர்கள்?

நம் வார இறுதியை பிசியாக்க சில திரைப்படங்கள், இணையத்தொடர்கள் இந்த வாரம் ஒடிடி தளங்களில் வெளியாகவுள்ளன.
டக்கர் முதல் ஃபர்ஹானா வரை - இந்த வீக்கெண்டில் என்ன படம் பார்க்க போகிறீர்கள்?
டக்கர் முதல் ஃபர்ஹானா வரை - இந்த வீக்கெண்டில் என்ன படம் பார்க்க போகிறீர்கள்?Twitter

ஒரு நல்ல படம் பாத்து நாளாச்சு பா! என்று நாம் சொல்லுவோம். என்ன தான் தியேட்டரில் படம் பார்த்தாலும் வீக்கெண்ட்களில் ரிலாக்ஸாக நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ உட்கார்ந்து படம் பார்க்கும் அனுபவமே ஒரு தனி மெம்மரி தான்.

அப்படி நம் வார இறுதியை பிசியாக்க சில திரைப்படங்கள், இணையத்தொடர்கள் இந்த வாரம் ஒடிடி தளங்களில் வெளியாகவுள்ளன.

அவை என்னென்ன? இந்த பதிவில் பார்க்கலாம்

ஃபர்ஹானா

ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து கடந்த மே மாதம் வெளியான திரைப்படம் ஃபர்ஹானா. இப்படம் வெளியான சமயத்தில் எதிர்ப்புகளை சந்தித்தது.

இத்திரைப்படம் ஜூலை 8ஆம் தேதி சோனி லைவ் தளத்தில் வெளியாகவுள்ளது

டக்கர் முதல் ஃபர்ஹானா வரை - இந்த வீக்கெண்டில் என்ன படம் பார்க்க போகிறீர்கள்?
இந்த வாரம் OTT ரிலீஸ் : பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை - என்னென்ன படங்கள்?

டக்கர்

சித்தார்த் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் திரையரங்கை வந்தடையவே வெகு நாட்கள் ஆனது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நிரா நிரா பாடல் பல ஆண்டுகளாக நம் பிளேலிஸ்ட்டை ஆட்கொண்டிருந்தது.

டக்கர் திரைப்படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியான நிலையில், இந்த வாரம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என கூறப்படுகிறது

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்

இயக்குநர் முத்தைய்யா இயக்கத்தில், ஆர்யா, சித்தி இட்னானி நடித்து வெளியான படம் காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம்.

இந்த திரைப்படம் ஜீ 5 ஒடிடி தளத்தில் இந்த வீக்கெண்டில் வெளியாகிறது

டக்கர் முதல் ஃபர்ஹானா வரை - இந்த வீக்கெண்டில் என்ன படம் பார்க்க போகிறீர்கள்?
இந்த வாரம் OTT ரிலீஸ் : பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை - என்னென்ன படங்கள்?

ஸ்வீட் காரம் காபி

பழம்பெரும் நடிகைகள் மதுபாலா, லக்‌ஷ்மி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெப் சீரீஸ் ஸ்வீட் காரம் காபி. பெண்களின் சுதந்திரத்தை மையமாக பேசும் இந்த இணைய தொடர், நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் நாளை வெளியாகிறது

இவற்றை தவிர இந்தி திரைப்படமான பிளைன்ட் ஜியோ சினிமாவிலும், தார்லா ஜீ 5 தளத்திலும் வெளியாகின்றன.

ஹாலிவுட் படங்களான 65 மூவிஸ், தி அவுட் லாஸ், கோல்ட் பிரிக் ஆகிய திரைப்படங்கள் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. திரையரங்குகளில் இந்த வாரம் எந்த படங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டக்கர் முதல் ஃபர்ஹானா வரை - இந்த வீக்கெண்டில் என்ன படம் பார்க்க போகிறீர்கள்?
June OTT released Movies: நீங்கள் பார்க்க தவறிய படங்கள் என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com