Elephant Whisperers போல யானையை மையப்படுத்தி எடுத்த தமிழ் திரைப்படங்கள் குறித்து தெரியுமா?

அப்படி யானைக்கு மனிதர்களுக்கும் இருக்கும் பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட ஐந்து திரைப்படங்கள் குறித்து இங்கே காணலாம்.
Elephant Whisperers
Elephant Whisperers Twitter

தமிழ் சினிமா ரசிகர்கள் ரசிக்க எண்ணற்ற திரைப்படங்களைக் கொடுத்துள்ளது.

அதிலும் குறிப்பாக மனிதர்கள் இயற்கையுடனும் விலங்குகளுடனும் எவ்வாறு இணைந்திருக்கிறார்கள் என்பதை ரசிகர்களுக்கு பல உணர்வுகள் மூலமாக விளக்கியுள்ளது சினிமா.

தற்போது கூட முதுமலையில் எடுக்கப்பட்ட "தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்" என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றது.

அப்படி யானைக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட ஐந்து திரைப்படங்கள் குறித்து இங்கே காணலாம்.

நல்ல நேரம்

எம்.ஏ.திருமகன் இயக்கி 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் நல்ல நேரம்.

எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் கே.ஆர்.விஜயா ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது.

இந்த படம் யானைகள் மக்களைக் கொன்றுவிடுமோ என்ற அச்சத்தை பல பார்வையாளர்களிடையே நீக்கியது.

அன்னை ஒரு ஆலயம்

தியாகராஜன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா முக்கிய வேடங்களில் நடித்திருந்த படம் 'அன்னை ஒரு ஆலயம்'.

இப்படத்தில் ரஜினிகாந்த் வேட்டைக்காரனாக நடித்திருந்தார். அவர் தனது வியாபாரத்திற்காக புதிதாகப் பிறந்த யானையைப் பிடிக்கிறார். பின்னர், விலங்குகளுக்கும் உணர்ச்சிகள் இருப்பதைப் புரிந்துகொண்டு, குட்டியை தாய் யானையுடன் மீண்டும் இணைக்கிறார்.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கும்கி

பிரபு சாலமன் இயக்கிய 'கும்கி' ஒரு மாடர்ன் யானை வாழ்வாதாரத்தைப் பற்றியது.

ஒரு கோவில் யானை, காட்டு யானைகளிடமிருந்து கிராம மக்களைக் காக்கும் கதை களத்தில் மனிதர்களுக்கும் யானைக்கும் இருக்கும் பிணைப்பை அவ்வளவு அழகாக எடுத்துரைக்கும் படம் கும்கி. இந்த படம் மூலம் அறிமுகமான முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

கடம்பன்

'கடம்பன்' பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் அவர்களின் வன நிலத்தை ஒரு தொழிலதிபரிடம் இருந்து காப்பாற்றும் போராட்டம். இதில் ஆர்யா மற்றும் கேத்தரின் தெரசா முக்கிய வேடங்களில் நடித்தனர்.

ஆர்யா காட்டைக் காப்பாற்றுவதற்காக யானைகளின் குழுவின் உதவியைப் பெறுகிறார். அதன் பின்னர் யானை அவருக்கு மிகுந்த பக்க பலமாக இருக்கிறது.

Elephant Whisperers
The Elephant Whisperers: யானைகளின் தந்தையும் தாயுமான தம்பதி - ஆவணப்படம் உருவானது எப்படி?

காடன்

'காடன்' என்பது மாணிக்கம் என்ற யானையைப் பற்றியது. 'காடன்' படத்தின் கதை, இயக்குநரின் முந்தைய வெற்றிப் படமான 'கும்கி'யைப் போன்றது. ஆனால் இது இரண்டு வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கையையும் யானைகள் மீதான அவர்களின் பாசத்தையும் காட்டியது. விஷ்ணு விஷால் மற்றும் ராணா டக்குபதி முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

பின்னர் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

Elephant Whisperers
கம்போடியா : உலகின் தனிமையான யானை கான்வா நிலை இப்போது இதுதான்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com