பிரபல ஹாலிவுட் FRIENDS தொடர் நடிகர் மேத்யூ பெர்ரி காலமானார் - ரசிகர்கள் அதிர்ச்சி!

மாரடைப்பு ஏற்பட்டு பாத் டப்பில் மூழ்கி இவர் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. இவரது திடீர் மறைவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது
மேத்யூ பெர்ரி
மேத்யூ பெர்ரிட்விட்டர்

ஹாலிவுட்டின் பிரபல நடிகரான மேத்யூ பெர்ரி காலமானார். இவருக்கு வயது 54. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இவரது வீட்டின் பாத் டப்பில், இறந்து கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1994 முதல் 2004 வரை ஹாலிவுட்டில், வெளியான தொடர் பிரண்ட்ஸ் (FRIENDS). காமெடி, காதல், டிராமா என கலவையாக வெளிவந்த இந்த தொடர், தலைமுறைகள் கடந்து இன்றளவும், உலகின் பல்வேறு நாட்டின் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.

ஆறு நண்பர்கள், அவர்கள் தினசரி வாழ்க்கை 10 ஆண்டுகளில் ஏற்படும் மாற்றங்கள், அன்றைய அமெரிக்காவின் சூழல் என அனைத்தையும் கவர்ந்தது இந்த தொடர். இதில் சாண்ட்லர் பிங் என்ற கதாபாத்திரத்தில் மேத்யூ பெர்ரி நடித்திருந்தார்.

தொடரின் புகழுக்கு இவரது கதாபாத்திரமே முக்கிய காரணம் எனலாம். சீரியலில் இவரது ஒன் லைனர்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை கொண்டு சேர்த்தது.

இவரது தோழியும், நண்பரின் தங்கையுமான மோனிக்கா கெல்லரை காதலித்து திருமணம் செய்துகொள்வான் சாண்ட்லர். இவர்களது காதல், இவர்களுக்குள் இருந்த புரிதல், ஒரு கணவனாக சாண்ட்லரின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்கள், கபுள் கோல்ஸ் என்று நாம் இன்று சொல்வதற்கு முன்னோடியாக இருந்தது.

மேத்யூ பெர்ரி
Marimuthu: இயக்குநர் - நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் மரணம்! திரைத்துறையினர் இரங்கல்

தொடர் ஒளிபரப்பான 10 ஆண்டுகளில், மது மற்றும் புகைப்பழக்கத்திற்கு ஆளான மேத்யூ பெர்ரி விமர்சனங்களுக்கு உள்ளானதும் குறிப்பிடத்தக்கது. தொடரின் ஒவ்வொரு சீசனிலும் இவரது உடல் எடையில் மாற்றங்கள், இவரது போதை பழக்கத்தின் பிரதிபலிப்பாக இருந்தது.

இந்நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு பாத் டப்பில் மூழ்கி இவர் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. இவரது திடீர் மறைவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

மேத்யூ பெர்ரி
Sarath Babu: ’முள்ளும் மலரும்’ நடிகர் சரத் பாபு காலமானார் - திரைத்துறையினர் இரங்கல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com