சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதில் படம் வென்றிருக்கிறது. இந்த படத்தின் ப்ரொமோஷனுக்காக இயக்குநர் ஜிவிஎம் பல ஊர்களில் பல மீடியாக்களுக்கு நேர்காணல் கொடுத்து வருகிறார்.
தெலுங்கு மீடியா ஒன்றுக்கு அவர் நேர்காணல் கொடுத்த போது தொகுப்பாளர் கேட்ட தவறான கேள்வி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த தொகுப்பாளர் ஜிவிஎம்மிடம், செக்க சிவந்த வானம் படத்தை எப்படி எடுத்தீர்கள்? அதில் விஜய் சேதுபதி, சிம்பு என பலரை நடிக்க வைக்க வேண்டியது இருந்ததே? எனக் கேட்டார்.
அதற்கு ஜிவிஎம் எந்த சலசலப்பும் இல்லாமல், "அது சவாலாக இருந்தது. சிம்பு, விஜய் சேதுபதி, அருண்விஜய், அரவிந்த் சாமி ஆகியோரின் நாட்களை வாங்குவது கடினம் தான். அவர்கள் பிசியான நடிகர்கள். ஆனால் நான் மணிரத்னம் என்பதனால் அவர்கள் சரியாக வருகை தந்தனர். அதிகாலை 4,5 மணிக்கெல்லாம் நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவோம். சிம்பு உட்பட அனைவரும் செட்டில் இருப்பார்கள். கௌதம் வாசுதேவ் மேனன் படத்துக்கு சிம்பு சரியான நேரத்து வரவில்லை என்றாலும் நான் மணி சார் என்பதால் வந்துவிடுவார். அது ஒரு நல்ல அனுபவம்" என நகைச்சுவையாக கூறினார்.
தான் இயக்கிய படங்கள் பற்றிக் கூட தெரியாமல் கேள்விகேட்கும் தொகுப்பாளரிடம் கோபப்படாமல், அதனை நகைச்சுவையாக மாற்றியிருந்தார் ஜிவிஎம். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ப்ளூசட்டை மாறன் இடையில் சர்ச்சை எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust