லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம், தமிழ் நாட்டில் மட்டும் முதல் நாளில் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளது. விக்ரமில், நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், கைதி படத்திலும் சரி, விக்ரமிலும் சரி, காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கப்பட்ட பழைய பாடல்களுக்குத் தான் மவுசு அதிகமாகியிருக்கிறது.
ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக இப்போது புதிய தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. விக்ரம் படத்தில் பயன்படுத்தப்பட்டு ட்ரெண்டான சக்கு சக்கு வத்திகுச்சி பாடலில் 90'ஸ் கிட்ஸின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வேலை செய்திருக்கிறாராம்.
இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு பின்னணி இசையமைக்க, முதலில் பத்தல பத்தல பாடல் வெளியானது.
அரசியல் சார்ந்த வரிகளுக்காக சில எதிர்ப்புகளை இப்பாடல் எதிர்கொண்டாலும், பல வருடங்களுக்குப் பிறகு, கமலுக்கு ஒரு ஹீரோ Intro சாங், அதிலும் கமலின் வேற லெவல் குத்தாட்டம் ரசிகர்களை கவர்ந்தது.
லோகேஷ் கனகராஜின் யுனிவெர்ஸ் தனி. இவர் படத்தில் பின்னணியில் இவர் பயன்படுத்தும் பழைய பாடல்கள் தான் எல்லாரையும் கவரும்.
ஆம், கைதி, மாஸ்டர் படங்களிலும் சரி, விக்ரமிலும் சரி, கதையின் மிக முக்கியக்கட்டத்தில் இரண்டு பழைய பாடல்கள் ஒலிக்கும். இதற்கு பிறகு அந்த இரண்டு பாடல்களும் மீண்டும் மக்கள் அதிகமாக முணுமுணுக்கத் தொடங்கிவிட்டனர்.
கைதி படத்தில் ஜும்பலக்கா ஜும்பலக்கா" பாடலும், "ஆசை அதிகம் வச்சு" பாடலும் இடம்பெற்றிருக்கும். கைதி வெளிவந்த போது இதற்கு மீண்டும் ஒரு தனி Vibe கிடைத்தது.
இதை தொடர்ந்து இப்போது கமலின் விக்ரம் படத்தில் இடம்பெற்ற "சக்கு சக்கு வத்திக்குச்சி" பாடல் தான் டிரெண்டிங்கில் உள்ளது. படத்தின் ஆரம்பத்தில் கமலுக்காக காத்திருக்கையில் ஒரு காரில் ஒலிக்கும் சக்கு சக்கு பாடல், பின்னர் second half ல் ஒரு முறையும் ஒலிக்கும்.
படம் பார்த்தவர்களில் பலர் இது என்ன பாடல் என்று மண்டையை பிய்த்துக்கொள்ள, அது அருண் பாண்டியன் நடிப்பில் 1995ல் வெளியான அசுரன் திரைப்படத்தில் வரும் பாட்டு. இந்த படத்திற்கு ஆதித்யன் இசையமைத்திருக்க, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இதற்கு Programming செய்துள்ளாராம்.
பாடல் இந்த நான்கு நாட்களாக வைரலாகி வரும் நிலையில், இதை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தன் மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார் ஹாரிஸ்.
இந்த பாடல் திரும்பத் திரும்ப மூளைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும், இப்படிப் பட்ட ஒரு பாடலை, இந்த தலைமுறைக்கு டிஸ்கவர் செய்து கொடுத்த இயக்குநருக்குக் குவிகிறது பாராட்டு. விக்ரம் படம் மூலம், வித விதமாக வந்து சேர்ந்துகொண்டிருக்கிறது லோகேஷுக்கு புகழ்.
இதைத் தவிர கல்வியா செல்வமா வீரமா பாடலும் ஒரு முறை வரும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust