புனித் ராஜ்குமார் எனும் மாமனிதன்: எப்பப்பா இவ்வளவு கொடைகளா? - நம் கால கர்ணன்

பவர் ஸடார் என்று பெயர் பெற்றிருந்த புனித் ராஜ்குமார் வாழ்ந்த காலத்தில் 26 அனாதை இல்லங்கள் மற்றும் 16 முதியோர் இல்லங்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வந்தார்.
புனித் ராஜ்குமார்
புனித் ராஜ்குமார் Newssensetn

கன்னட சினிமா ரசிகர்கள் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு பெயர் புனித் ராஜ்குமார்.

போஸ்டர் அளவில் மட்டுமில்லாமல் இதயத்தில் வைத்து கொண்டாடும் ரசிகர்களைப் பெற்றிருந்தார் புனித் ராஜ்குமார்.

இது போன்ற ரசிகர் படையைக் கொண்டிருக்க திரைப்படங்களைத் தாண்டியும் பலவகையில் மக்களை ஈர்த்தார் புனித் ராஜ்குமார்.

தன்னை பின்பற்றும் ரசிகர்களை சரியாக வழிநடத்தியும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புனித் ராஜ்குமார் நிறைவேற்றிய சமூக நலப்பணிகள் என்னவென்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

26 அனாதை இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள்

பவர் ஸ்டார் என்று பெயர் பெற்றிருந்த புனித் ராஜ்குமார், வாழ்ந்த காலத்தில் 26 அனாதை இல்லங்கள் மற்றும் 16 முதியோர் இல்லங்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வந்தார்.

கன்னட வழியில் கல்வி கொடுக்கும் பள்ளிகளுக்கு உதவினார். கிட்டத்தட்ட 1800 மாணவர்களைப் படிக்க வைத்துள்ளார்.

ஏழை மாணவர்களுக்காக 45 பள்ளிகளைக் கட்டிக்கொடுத்தார்.

பெண்களுக்கான சக்திதாமா அறக்கட்டளை

புனித் தனது அம்மாவுடன் இணைந்து சக்திதாமா அறக்கட்டளைப் பணிகளைத் தொடங்கினார்.

இந்த அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கான ஏழை மாணவிகளின் படிப்புக்கு உதவினர்.

மேலும், வன்புணர்வுக்கு ஆளானவர்கள், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு இடமும் உணவும் வேலைப் பயிற்சியும் அந்த அறக்கட்டளையால் கொடுக்கப்பட்டன.

இந்த பெண்கள் முழு மன உறுதி பெற்ற பின்னர் தொழில் தொடங்க உதவியும் அளிக்கப்பட்டது, இப்படியாக 4000 பெண்கள் புதுவாழ்வு பெற்றனர்

புனித் ராஜ்குமார்
"பசியோடு யாரும் உறங்கக்கூடாது" - 'Bread For All' திட்டத்தை அறிமுகப்படுத்திய துபாய் அரசு

கண் தானம்

தனது தந்தை மற்றும் தாயைப் போலவே தானும் கண் தானம் செய்துகொண்டார் புனித் ராஜ்குமார்.

பெரும்பாலும் கண்தானம் செய்த நபர் இறப்புக்கு பிறகு அவர்களது குடும்பத்தினர் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தாமல் இருந்துவிடுவர்.

ஆனால் புனித்தின் சகோதரர் சரியான நேரத்தில் மருத்துவர்களை அழைத்து தகவல் கூறியிருக்கிறார்.

புனித்தின் கண்கள் அவர் இறப்புக்கு பின்னரும் தேவையானவர்களுக்கு பார்வைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

புனித் இறந்த அடுத்த 4 மாதங்களில் அவரது 70,000 ரசிகர்கள் கண் தானத்திற்குப் பதிவு செய்தனர்.

டாக்டர் ராஜ்குமார் கண் தான வங்கி மூலம் 15,000க்கும் மேற்பட்டோரின் கண்கள் தானமாகப் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம்புலன்ஸ் சேவை

புனித் ராஜ்குமாரின் மரணத்துக்குப் பிறகு அப்பு ஆம்புலன்ஸ் என்ற ஆம்புலன்ஸ் சேவைத் தொடங்கப்பட்டது.

நடிகர் பிரகாஷ் ராஜ் அறக்கட்டளை மூலம் இந்த ஆம்புலன்ஸ் வாங்கிக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாகனங்களுக்கு அப்பு எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த ஆம்புலன்ஸ் சேவை விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித் ராஜ்குமார்
உலகிலேயே மிகப் பெரிய நன்கொடை வழங்கிய நபர் - எதற்காக தெரியுமா?

கொரோனா காலத்தில் அரசுக்கு 50 லட்சம் நிதியுதவி செய்தார் புனித் ராஜ்குமார்.

மேலும் அவர் மரணிப்பதற்கு முந்தைய ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 5 லட்சம் நிதியுதவி செய்தார்.

புனித்தின் மரணத்துக்குப் பிறகே அவர் செய்த பல நன்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

புனித் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் சமூக நல உதவிகளைச் செய்ய வேண்டும்.

ஒரு நடிகர் அவரது ரசிகர்களை எப்படி சரியான வழியில் நடத்த வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தார் புனித். அவரது நல்லுள்ளத்தை நினைவுகூறுவோம்.

புனித் ராஜ்குமார்
சிவ நாடார் : இந்தியாவிலேயே அதிக நன்கொடை; அதானியை விட 6 மடங்கு அதிகம் - 2022ல் பாரி வள்ளல்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com