உலகில் இதுவரையில் வழங்கப்பட்டதிலேயே மிகப்பெரிய நன்கொடையை வழங்கியவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் AIRBNB நிறுவனத்தின் துணை நிறுவனரான பிரையன் செஸ்க்கி. அமெரிக்காவை சேர்ந்தவாரான இவர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஓபாமா மற்றும் மிச்செல் ஓபாமா தம்பதியினர் நடத்தி வரும் கல்வி அறக்கட்டளைக்கு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார். சமூக சேவையில் ஈடுபடுகிற, உலகெங்கும் பயணம் மேற்கொள்கிற மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்காக இந்த நன்கொடையானது செலவிடப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
“Voyager Scholarship” என்கிற கல்வி உதவித் தொகை திட்டத்தின் மூலம் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் 25000 அமெரிக்க டாலர்களை உதவித் தொகையாகப் பெறுவார்கள். மேலும் கோடைக்காலத்தில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு 1000 அமெரிக்க டாலர் சிறப்பு உதவித் தொகையாகவும், AIRBNB யின் தங்குமிடம் இலவசமாகவும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதன் மூலம் மாணவர்கள் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு ஒரு புதிய பார்வையை வழங்கிடவும் முடியும் என்கிறார்.
அதுமட்டுமில்லாமல், கல்லூரி படிப்பை முடித்துவிட்ட மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2000 அமெரிக்க டாலர்கள் வழங்கி, அவர்கள் விரும்புமிடங்களுக்கு பயணம் மேற்கொண்டு சமூக சேவை புரிவதற்கான உந்துதலை அளிக்கவும் திட்டமிட்டிருக்கிறார். இந்த திட்டத்தின் படி, முதற்கட்டமாக 100 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறினார்.
இதுகுறித்து முன்னாள் ஜனாதிபதி ஓபாமா கூறுகையில், “நமது அடுத்த தலைமுறை தலைவர்கள் அவர்கள் விரும்பியதைச் செய்யவும், புதிய இடங்களுக்குப் பயணிக்கவும், புதிய மனிதர்களைச் சந்தித்து அவர்கள் குறித்து அறிந்து கொள்ளவும் முடியும்” என்றார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp