“இந்தி நாட்டின் தேசிய மொழி இல்லை” - இணையத்தில் சண்டையிட்ட அஜய் தேவ்கன் மற்றும் சுதீப்

ஹிந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள்? என ட்விட் செய்திருந்தார் அஜய் தேவ்கன்.
அஜய் தேவ்கன் மற்றும் கிச்சா சுதீப் சஞ்சீவ்
அஜய் தேவ்கன் மற்றும் கிச்சா சுதீப் சஞ்சீவ்Twitter
Published on

அரசியலில், சினிமா எனப் பல தளங்களில் எதிரொலிக்கிறது இந்தி திணிப்பு பிரச்சனை. சமீபமாக பான் - இந்தியா படங்கள் அதிகரித்திருக்கும் சூழலில் சினிமாவில் “தேசிய மொழி” பிரச்சனை எழுந்திருக்கிறது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்த கன்னட சுதீப் ட்விட்டரில் இது குறித்தான வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் பேசிய சுதீப்பிடம் கன்னட படமான கேஜிஃப் - 2ன் பான் இந்தியா வெற்றி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் “இனி ஒரு போதும் இந்தி நம் தேசிய மொழி இல்லை” எனப் பேசியிருந்தார். இது பாலிவுட் வட்டாரங்களை புருவமுயர்த்த செய்தது.

"எனது சகோதரரே... ஹிந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள்? ஹிந்தி முன்பும் இப்போதும் இனிமேலும் நமது தாய்மொழியாகத் தேசிய மொழியாக இருக்கும்" என பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் சுதீபிற்கு பதிலளிக்கும் வகையில் ட்விட் செய்தார். அதுவும் ஹிந்தியில்…

இதற்குப் பதிலளித்த சுதீப், "நான் பேசியது, பொருள் வேறாக உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் என நினைக்கிறன. நான் நேரில் சந்திக்கும் போது ஏன் அப்படிச் சொன்னேன் என்பதை உங்களுக்கு விளக்கிச் சொல்கிறேன். புண்படுத்துவது போலவோ, தூண்டும்படியோ, விவாதத்துக்கோ நான் அதைச் சொல்லவில்லை. நான் ஏன் அப்படிச் செய்யப்போகிறேன் சார்" எனப் பதிலளித்திருந்தார்.

அத்துடன், "நீங்கள் ஹிந்தியில் அனுப்பியது எனக்குப் புரிந்தது. ஏனென்றால் நாங்கள் மதித்து, நேசித்து ஹிந்தியை கற்றுக் கொண்டிருக்கிறோம். புண்படுத்துவது என் நோக்கம் இல்லை. ஆனால், இப்போது எனக்குத் தோன்றுகிறது. ஒருவேளை என்னுடைய பதிலை நான் கன்னடத்தில் பதிவிட்டு இருந்தால் அது உங்களால் எப்படிப் புரிந்து கொள்ளப்படும் என்று. நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம் சார்?!" என்றார்.

அஜய் தேவ்கன் மற்றும் கிச்சா சுதீப் சஞ்சீவ்
அமித் ஷா, ஏ. ஆர். ரஹ்மான் : 'இந்தி தெரியாது' : ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

இந்தப் பதிலுக்குப் பிறகு அஜய் தேவ்கன், "நீங்கள் என் நண்பர். தவறாக நான் புரிந்துகொண்டதைத் தெளிவுபடுத்தியதற்கு நன்றி. நான் எப்போதும் நமது துறை ஒன்று என்றே கருதி வருகிறேன். நாம் எல்லா மொழிகளையும் நேசிக்கிறோம். அதே போல எல்லோரும் நமது மொழிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று பகிர்ந்திருந்தார்.

இதன் பிறகு இருவரும் இந்த விவகாரத்தைக் கிடப்பில் போட்டனர். சமீபத்தில் வெளியான புஷ்பா, RRR மற்றும் KGF படங்களின் வெற்றியே பாலிவுட் பிரபலங்கள் இது போன்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதற்குக் காரணம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் மத்திய அமைச்சர் அமித்ஷா "இந்தி தான் நாட்டின் இணைப்பு மொழி" எனப் பேசிய போது ஏ.ஆர்.ரஹ்மான் தமிழணங்கு ஓவியத்தை வெளியிட்டது வைரலானதை மறந்து விட முடியாது. அப்போது தமிழ் தான் இணைப்பு மொழி என்றும் கூறியிருந்தார் ரஹ்மான்.

அஜய் தேவ்கன் மற்றும் கிச்சா சுதீப் சஞ்சீவ்
ஆயுஷ்மான் குரானா : "தொன்மையான மொழிகளில் ஒன்று தமிழ்" - தமிழ் பெருமை பேசிய இந்தி நடிகர்
அஜய் தேவ்கன் மற்றும் கிச்சா சுதீப் சஞ்சீவ்
ஏ. ஆர். ரஹ்மான் பகிர்ந்த ‘தமிழணங்கு’ ஓவியம் யார் வரைந்தது தெரியுமா?

அஜய் தேவ்கனுக்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, "இந்தி நம் தேசிய மொழி அல்ல, இனியும் இருக்காது. எல்லா இந்தியரும் நாட்டின் வேறுபட்ட மொழிகளை மதிக்க வேண்டும். நான் கன்னடன் என்பதில் பெருமை கொள்கிறேன்" என ட்விட் செய்திருந்தார்.

அத்துடன் இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா, "நீங்கள் கூறியது மறுக்க முடியாத உண்மை சுதீப் சார். வட மாநில கதாநாயகர்கள் தென்னிந்திய படங்களின் வெற்றியைக் கண்டு அஞ்சுகிறார்கள், பொறாமைப்படுகிறார்கள். கேஜிஎஃப் 2 திரைப்படம் ஹிந்தியில் முதல் நாளில் மட்டும் 50 கோடி வசூலித்தது...." என ட்விட் செய்திருந்தார்

அஜய் தேவ்கன் மற்றும் கிச்சா சுதீப் சஞ்சீவ்
"தமிழ் தான் இணைப்பு மொழி" அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

அஜய் தேவ்கன் மற்றும் கிச்சா சுதீப் சஞ்சீவ்
அம்பேத்கருக்கு நிகராக மோடியை புகழ்ந்த இளையராஜா - விரிவான தகவல்கள்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com