Joe : சிவகார்த்திகேயனை பின் தொடரும் Rio Raj - யார் இவர்?
Joe : சிவகார்த்திகேயனை பின் தொடரும் Rio Raj - யார் இவர்?Twitter

Joe : சிவகார்த்திகேயனை பின் தொடரும் Rio Raj - யார் இவர்?

ரியோ ராஜ் ஹீரோவாக நடித்துள்ள ஜோ திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மனதை கொள்ளையடித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சாதாரணமாக தொடங்கிய அவரது வாழ்க்கை எப்படி சினிமா பக்கம் திரும்பியது எனப் பார்க்கலாம்.

கிட்டதட்ட 10 ஆண்டுகளாக சினிமாவில் சாதிக்க வேண்டும் என தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர் தான் ரியோ ராஜ். ஈரோடு மாவட்டத்தில் சாதாரணமாக தொடங்கிய அவரது வாழ்க்கை எப்படி சினிமா பக்கம் திரும்பியது எனப் பார்க்கலாம்.

ஈரோடு மாவட்டத்தில் பிப்ரவரி 17, 1989 ஆம் ஆண்டு பிறந்தவர் ரியோ ராஜ், அங்கே அவர் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இவர் மீடியா மீதான ஆர்வத்தில் 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை' என்ற தொடரின் மூலம் சின்னத்துறைக்கு அறிமுகமானார்.

அதன் பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் சேர்ந்தார். கிட்டதட்ட மூன்று வருடங்களுக்கு மேல் சன் மியூசிக்கில் பணியாற்றிய ரியோ, சுடசுட சென்னை, கல்லூரி காலம், பிரீ ஆஹ் விடு, காபி டீ ஏரியா போன்ற ஷோக்களை தொகுத்து சூப்பராக எடுத்துச் சென்றார். அதில் கொஞ்சம் பிரபலமும் ஆனார்.

அதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியின் பிரபல தொடரான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூன்றாம் பாகத்தில் ஹீரோவாக நடித்தார்.

இதற்கிடையில் அவரது நீண்ட கால தோழியான ஸ்ருதியை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர் 2017-ம் ஆண்டு விக்ரம் பிரபுவின் சத்ரியன் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது வெள்ளித்திரை பயணத்தை தொடங்கினார். பின்னர், 2019 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ரியோ அறிமுகமானார்.

அதன் பின்னர், 2020ஆம் ஆண்டு பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு பெரிதாக எதுவும் கைக்கொடுக்கவில்லை.

Joe : சிவகார்த்திகேயனை பின் தொடரும் Rio Raj - யார் இவர்?
DJ Black : இன்ஸ்டா ரீல்ஸில் அடிக்கடி வைரல் - யார் இந்த டிஜே பிளாக்

மீடியாவில் பல பிரேக்குகளை எடுத்திருந்தாலும், சினிமாவை விட்டு விலகவில்லை, தொடர்ந்து தனது உழைப்பை ரியோ போட்டுக்கொண்டே இருந்தார்.

இதற்கிடையில் டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் தொகுப்பாளராக, பிக் பாஸ் போட்டியாளர் என பல வேலைகளை செய்துக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ரியோ ராஜ் ஹீரோவாக நடித்துள்ள ஜோ திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அதிகம் எதிர்பார்ப்பில்லாமல் திரையரங்குகளில் வெளியான ஜோ படத்துக்கு பாசிட்டிவ் ரிவ்யூக்கள் கிடைத்து வருகின்றன.

ரியோ ராஜுக்கு கம்பேக் கொடுத்துள்ள ஜோ படத்தை திரை பிரபலங்களும் பார்த்து பாராட்டி வருகின்றனர்.

இதன் பின்னர் நல்ல கதைகளத்துடன் தொடர்ந்து வெற்றிப் படங்களை ரியோ கொடுப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Joe : சிவகார்த்திகேயனை பின் தொடரும் Rio Raj - யார் இவர்?
சுதந்திர இந்தியாவின் முதல் பில்லியனர்: பிரைவேட் ஏர்லைன் வைத்திருந்த இவர் யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com