சுதந்திர இந்தியாவின் முதல் பில்லியனர்: பிரைவேட் ஏர்லைன் வைத்திருந்த இவர் யார்?

இவர் குறித்த தரவுகள் சரியாக இருந்தால் 185 கேரட் வைரத்தைதான் அவர் பேப்பர் வெயிட்டாக பயன்படுத்துவாராம். ராணி எலிசபத் 2 திருமணத்துக்கு இவர் அளித்த வைர நெக்லஸை ராணி மரணிக்கும் வரை அணிந்திருந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பில்லியனர்: பிரைவேட் ஏர்லைன் வைத்திருந்த இவர் யார்?
சுதந்திர இந்தியாவின் முதல் பில்லியனர்: பிரைவேட் ஏர்லைன் வைத்திருந்த இவர் யார்?Twitter
Published on

இந்தியாவின் பணக்காரர்கள் என்றதுமே நம் நினைவுக்கு வருவது முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, ஷிவ் நாடார், லக்ஷ்மி மிட்டல் உள்ளிட்டோர் தான். 

குறிப்பாக முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி மிகப் பெரிய உச்சத்தை எட்டியுள்ளனர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளனர்.

ஆனால் இந்திய சுதந்திரத்தின் போது மிகப் பெரிய பணக்காரராக இருந்தவரான மிர் ஓஸ்மான் அலி கான் பற்றி நாம் பெரிய அளவில் அறிந்திருக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

1886ல் பிறந்த மிர் ஓஸ்மான் சுதந்திர இந்தியாவின் முதல் பில்லியனராக திகழ்ந்தார். அவர் தான் பிரிட்டிஷ் காலத்தில் ஹைதராபாத்தின் கடைசி நிஜாமாக இருந்தவர்.

இந்தியாவுடன் இணையாமல் பிரிட்டிஷ் அரசுக்கு ஒத்துழைத்து 1911 முதல் ஹைதராபாத்தை ஆண்டு வந்தார். 1948ல் ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்த பிறகு அவரது ஆட்சி நிறைவடைந்தது. 

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் அல்லது தனி ராஜ்ஜியமாக ஹைதராபாத்தை ஆள வேண்டும் என எண்ணினார்.

அந்த காலத்தில் இந்தியாவிலேயே பணக்கார நபராக அவர் தான் அறியப்பட்டார்.

உலக அளவில் குறிப்பிடத்தக்க பணக்காரராக இருந்தார். 1940களில் அவரிடம் 2 பில்லியன் டாலர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 2023ல் இதன் மதிப்பு 35.8 பில்லியன் டாலர்கள்.

நவீன ஹைதராபாத்தை வடிவமைத்தவர் என அறியப்படும் நிஜாம், இந்தியாவின் முதல் ஏர்லைன் மற்றும் ஏர்போர்டை உருவாக்கினார். 

சுதந்திர இந்தியாவின் முதல் பில்லியனர்: பிரைவேட் ஏர்லைன் வைத்திருந்த இவர் யார்?
Last Mughal : பகதூர் ஷா ஜாஃபர் II - முகலாய பேரரசரின் கடைசி வாரிசின் சோக கதை | Podcast

அவரது காலத்தில் ஹைதராபாத்தில் சாலை வசதிகள் செய்யப்பட்டது. ரயில் வசதி வந்தது.

ஹைதராபாத் உயர்நீதிமன்றம், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் ஆகியவற்றை உருவாக்கினார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பில்லியனர்: பிரைவேட் ஏர்லைன் வைத்திருந்த இவர் யார்?
Mir Jafar: ஆங்கிலேயர்களிடம் இந்தியாவை விற்ற நபர் - துரோகத்தின் வரலாறு

1937ல் டைம்ஸ் மேகசினின் அட்டைப்படத்தில் இவர் இடம் பெற்றுள்ளார். இவர் குறித்த தரவுகள் சரியாக இருந்தால் 185 கேரட் வைரத்தைதான் அவர் பேப்பரில் பறக்காமல் இருக்க வைக்கப்படும் எடையாக பயன்படுத்துவாராம்.

ராணி எலிசபத் 2 திருமணத்துக்கு இவர் அளித்த வைர நெக்லஸை ராணி மரணிக்கும் வரை அணிந்திருந்தாராம். இந்தியா ஹைதராபாத்தை ஆட்சி செய்யத் தொடங்கிய பிறகு இவர் அரசு பிரமுகராக இருந்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பில்லியனர்: பிரைவேட் ஏர்லைன் வைத்திருந்த இவர் யார்?
எலிசபெத் மகாராணி - இளவரசர் பிலிப்பின் தசாப்தங்கள் கடந்த காதல் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com