ஏ ஆர் ரகுமான் முஸ்லிம் மதத்திற்கு மாறியதற்கான காரணம் குறித்து அவரது சகோதரி ரைஹானா சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளர் என்றால் அது ஏ.ஆர் ரகுமான். பல கோடி ரசிகர்கள் மக்கள் மனதில் ஏ.ஆர் ரகுமான் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் விளம்பரங்களுக்கு இசையமைத்திருந்த ஏ ஆர் ரகுமானுக்கு இயக்குனர் மணிரத்தினம் படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது.
1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். அதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. இதற்காக ஏ ஆர் ரகுமானுக்கு தேசிய விருதும் கிடைத்தது.
ஒரு இந்து குடும்பத்தில் பிறந்த ஏ ஆர் ரகுமான் எப்படி ஒரு இஸ்லாமிய குடும்பத்திற்கு மாறினார் என்பது குறித்த சில தகவல்களை ஏ ஆர் ரகுமானின் சகோதரி பகிர்ந்துள்ளார்.
சேகர் என்ற இசைக் கலைஞருக்கு மகனாய் பிறந்த திலீப் குமார், ஏ ஆர் ரகுமான் ஆக வளர்ந்தது எப்படி?
ஏ ஆர் ரகுமானின் சகோதரி ரைஹானா கூறுகையில்,
தனது தந்தை உடல்நல குறைவால் அவதிப்பட்டபோது தர்காவிற்கு சென்று வேண்டிக் கொண்டதாகவும், அதனால் சிறு காலம் அவரது தந்தை உயிருடன் இருந்ததாகவும், அதுமட்டுமின்றி தனது தாயார் சூஃபியிஸத்தால் ஈர்க்கப்பட்டதாகவும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் ரைஹானா.
இதனால் குடும்பத்துடன் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும் கூறினார். இஸ்லாம் மதத்தில் உள்ள சம்பிரதாயங்களை கடைப்பிடித்து ஐந்து நேர தொழுகையை வழக்கமாக்கிக் கொள்வதற்கு தனக்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும் தெரிவித்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust