கேரளாவில் உள்ள மசூதியில் நடந்த ஒரு தம்பதியின் திருமணம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி' படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையானது.
அந்த டிரெய்லரில் கேரள மாநிலத்தை சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் அழைத்துச் செல்லப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தை தடை செய்யக் கோரி பலரும் விவாதித்து வருகின்றனர்.
இதற்கிடையில் தான் அஞ்சு மற்றும் ஷரத் ஆகிய இந்த தம்பதி கடந்த 2020 ஆம் ஆண்டு ஆலப்புழா பகுதியில் உள்ள ஒரு மசூதியில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
மணப்பெண்ணின் தாயார் தனது மகள் திருமணத்திற்கு உதவுமாறு மசூதியிலுள்ள கமிட்டியை நாடியுள்ளார். அவரது சூழ்நிலையை புரிந்துகொண்ட மசூதி கமிட்டியினர் 10 சவரன் தங்க நகைகளும் ரூ. 20 லட்சம் பணமும் தந்து உதவியுள்ளனர்.
மசூதியில் அப்பெண்ணின் திருமணத்தை நடத்த அனுமதி வழங்கினர். அதன் பின்னர் அஞ்சு மற்றும் ஷரத்தின் திருமணம் மசூதியில் நடைபெற்றது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து 'இதுவும் ஒரு கேரளா ஸ்டோரி' என பலரும் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "மனிதத்தின் மீதான காதல் என்பது நிபந்தனைகளற்ரதாகவும் குணப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்" என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust