Vadivelu : சென்னை, மதுரையில் வீடு; மாமன்னன் வடிவேலுவின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடி வரும் வடிவேலுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் சமூகவலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Vadivelu : சென்னை, மதுரையில் வீடு; மாமன்னன் வடிவேலுவின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?
Vadivelu : சென்னை, மதுரையில் வீடு; மாமன்னன் வடிவேலுவின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?Twitter

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் வடிவேலு. இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடி வரும் வடிவேலுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் சமூகவலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும், தனக்கென ஒரு பாணியை தேர்வு செய்து ரசிகர்களை கவர்ந்தவர். தனது ஒவ்வொரு படத்திலும் கெட்டப் மாற்றி ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.

நடை, உடை, பாவனை, வசன உச்சரிப்பு என அனைத்து வகையிலும் ரசிகர்களை வடிவேலு சிரிக்க வைப்பார். இடையில் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் மக்கள் அவரை நினைக்காத நாளில்லை எனலாம். இதற்கு முக்கிய காரணம் சமூகவலைதளங்களில் வரும் மீம்ஸ்.

இணையத்தில் பல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அவர் தான் சோர்ஸ். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோசியல் மீடியாக்களில் வடிவேலு இல்லாமல் மீம்களை நம்மால் கடந்து விட முடியாது.

எந்த மீம்ஸ் போட்டாலும் அது வடிவேலு ரியாக்‌ஷனால் கச்சிதமாகி செட்டாகி விடும். நேசமணி மீம்ஸ் எல்லாம் உலக அளவில் டிரெண்ட் அடித்தது.

நகைசுவை நடிகாராக மட்டுமல்லாமல் ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். மாமன்னன் படத்தில் மாமன்னாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் உயர்ந்துவிட்டார் எனலாம். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.

Vadivelu : சென்னை, மதுரையில் வீடு; மாமன்னன் வடிவேலுவின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?
அஜித் - வடிவேலு : ஏன் இப்போது சேர்ந்து நடிப்பதில்லை

தற்போது இவர் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வடிவேலுவிற்கு சென்னையில் மட்டும் இரண்டு வீடு உள்ளதாம். இந்த வீட்டின் மதிப்பு மட்டும் 2 கோடி என்றும், இரண்டு ஆடி கார், பிஎம்டபிள்யூ, டொயோடா என நான்கு சொகுசு கார்களை வைத்துள்ளாராம்.

அதே போல இவருக்கு மதுரையில் ஒரு வீடும், 20 ஏக்கர் நிலமும் உள்ளதாக கூறப்படுகிறது. வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 130 கோடி இருக்கும் என்று சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

Vadivelu : சென்னை, மதுரையில் வீடு; மாமன்னன் வடிவேலுவின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?
”வடிவேலு என்னை ஆள் வைத்து அடித்தார் “ - காதல் பட நடிகர் சுகுமார் பகிர்ந்த பகீர் தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com