தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன்.
பாடல் , நடிப்பு , நடனம் எனப் பன்முகத்தன்மை கொண்ட ஸ்ருதிஹாசன்
அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை என்கேஜிங் ஆக வைத்துக் கொள்வார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவின் கேப்ஷனில் ஒரு சில நாட்களாக தான் ஹார்மோன் பாதிப்புகளால் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த பாதிப்பு பொதுவாக, சீரற்ற மாதவிடாய், முகம், உடல் பகுதிகளில் முடி அதிகம் வளர்தல் மற்றும் எடை கூடுதல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.
மேலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்வில் கடினம் நிறைந்த பகுதியாக இது இருக்கும் எனத் தெரியும். சமச்சீரற்ற நிலை, வயிறு நிரம்பியது போன்ற உணர்வுகளுடன் போராட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகக் கூறியுள்ளார்.
"நன்றாக உண்டு, உறங்கி, என் வேலைகளை செய்து நான் நன்றி கூறுகிறேன். இந்த சவால்களை ஏற்று பயணிக்கிறேன், இந்த விஷயங்களை எல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என முடித்திருக்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust