இளையராஜா மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் : அவர் குறித்த இந்த 8 விஷயங்கள் தெரியுமா?

தன் 14 வயதிலேயே ஒரு இசைக்குழுவில் இணைந்துகொண்டார். சிறிது காலத்திற்குள்ளேயே கவிஞர் கண்ணதாசனின் பாடல் ஒன்றுக்கு இசை கோர்க்கும் வாய்ப்பைப் பெற்றார். இசையின் மீதான அவரின் ஈடுபாட்டையும் விரைவில் கற்றுக்கொள்ளும் அவரின் திறனையும் அது நிரூபித்துக் காட்டியது.
இளையராஜா
இளையராஜாNewsSense
Published on

இன்றைய தலைமுறையின் காலத்துக்கும் ஏற்ப டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களிலும் சரளமாகப் புழங்கக்கூடிய இளைஞராக இருக்கிறார், இசைஞானி இளையராஜா.

இசைத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வண்ணமுமாக நேற்று மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

எண்பது வயதைத் தொட்டுவிட்ட இசைஞானியைப் பற்றிய 8 முக்கிய தகவல்கள் பார்க்கலாம்

ilaiyaraaja
ilaiyaraajaTwitter

இளையராஜாவின் இயர்பெயர்

என்னதான் இசைத்துறை சாதனையின் உச்சமாக மேஸ்ட்ரோ என்கிற பட்டத்தை அவருக்கு வழங்கியபோதும், இசைஞானிதான் இளையராஜாவுக்கு பிடித்தமான பெயர். உண்மையில் அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஞானதேசிகன்.

பள்ளிக்கூடத்தில் சேர்த்தபோது ஆசிரியர்கள் இராசையா என மாற்றிப் பதிந்துவிட்டார்கள். மூன்றாவது முறைப் பெயர்மாற்றம் ஆனது, அவரின் முதல் திரைப்படத்தில்!

அன்னக்கிளி திரைப்படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம், "ஏற்கெனவே தமிழ்த் திரையுலகில் ஏ.ம்.ராஜா இருக்கிறாரே; பெயர்க் குழப்பம் வேண்டாம்; உன்னை இளைய இராஜாவாக ஆக்கிவிடலாம்" என மாற்றிவிட்டார். அதுவே இசைஞானியின் மாற்றமுடியாத பெயராகி விட்டது.

ilaiyaraaja
ilaiyaraajaTwitter

இசை பயணம்

தென்தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்துப் பண்ணைப்புரத்தில் பிறந்த இளையராஜா, தன் அண்ணன் பாவலர் வரதராசன் குழுவுடன் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் கச்சேரிக்குப் போனதில், நாட்டுப்புற இசைக்கூறுகளை உள்வாங்கிக்கொண்டார்.

இசையின் அழகில் ஊன்றிப்போன அவர், தன் 14 வயதிலேயே ஒரு இசைக்குழுவில் இணைந்துகொண்டார். சிறிது காலத்திற்குள்ளே கவிஞர் கண்ணதாசனின் பாடல் ஒன்றுக்கு இசை கோர்க்கும் வாய்ப்பைப் பெற்றார். இசையின் மீதான அவரின் ஈடுபாட்டையும் விரைவில் கற்றுக்கொள்ளும் அவரின் திறனையும் அது நிரூபித்துக் காட்டியது.

இளையராஜா
Expo2020 : "Request Accepted" AR ரஹ்மானுடன் இசைமைக்கும் "இளையராஜா"

பிரபலங்களின் உதவியாளராக இளையராஜா

திரையுலகில் நுழைவதற்கு முன்னர், இசையமைப்பாளர் சலில் சௌத்ரியிடம் கிட்டார் கற்றுக்கொண்டார், இராசா. அப்போதைய இளைஞர்களின் ஏகவிருப்பமான ஆனந்த் படத்துக்கு இசையமைத்தது, அவரே! அவரையடுத்து கன்னட இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றினார், இளையராஜா.

அவருடன் இணைந்து நிறையக் கன்னடப் படங்களில் பணியாற்றி இருக்கிறார். இப்படியான இசையுலக மேதைகளுடன் வேலைசெய்தும் தன்னுடைய இசைத்திறனை மேலும் வளர்த்துக்கொண்ட இராசா, பின்னர் இசையுலகையே ஆட்டிப்படைத்தார்.

ilaiyaraaja
ilaiyaraajaTwitter

கமலுக்கும் ரஜினிக்கும்

தமிழ்த் திரையுலகில் நாயக முக்கியத்துவம், தனித்தனி அணிகளாக வளரத் தொடங்கிய கட்டத்தில், இளையராஜாவும் முன்னணியில் பணியாற்றினார்.

ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்துவிட்ட அவர், ஐந்தில் ஒரு பங்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களுக்கு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல மொழிகளில் வெளியிடப்பட்ட கமலின் சத்மா, ஹேராம், அபூர்வ சகோதரர்கள் ஆகியவை இளையராஜாவின் இசைக்கோப்பில் உருவானவையே! இதைப்போல, ரஜினிக்குத் தளபதி, மாப்பிள்ளை என இன்னொரு பக்கம்!

இளையராஜா
அம்பேத்கருக்கு நிகராக மோடியை புகழ்ந்த இளையராஜா - விரிவான தகவல்கள்

வித்தியாசமான அவையடக்கம்

கமலுக்கு இன்றைக்கும் அணுக்கமான உறவாக இருக்கும் இளையராஜாவை விட்டுவிட்டு 1999இல் ஹேராம் படத்துக்கு வயலின் மேதை எல் சுப்ரமணியத்தை அமர்த்தினார் கமல். ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது, அது. கெடுவாய்ப்பாக சுப்பிரமணியம் அந்தப் படத்திலிருந்து விலகுவதாகக் கூறிவிட்டார். ஆனால் அதற்கு முன்னால் அவர் சில பாடல்களுக்கு இசைக்கோப்பை முடித்துக் கொடுத்திருந்தார்.

கமலின் நிலையைச் சொல்லவேண்டுமா என்ன...? அவர் நினைத்ததைவிட எல்.சு.வின் இசைக்கோப்பும் சுத்தமாகப் பொருந்திவரவில்லை என்பது சிக்கல்... அதாவது, அதுவரை படமாக்கப்பட்ட பாடல் காட்சிகளை மீண்டும் மொத்தமாகப் படமாக்க வேண்டும்! யாரும் எதிர்பாராதபடி இசைஞானி தானே ஓடிவந்து கமலுக்குக் கைகொடுத்தார். அதே தரத்தில் கமல் விரும்பியவண்ணம் பின்னணி இசையையும் பாடல்களையும் செய்துகொடுத்தார். இதுதான் இளையராஜா!

ilaiyaraaja
ilaiyaraajaTwitter

இசைஞானியை புகழ்ந்த அமிதாப்

இந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சன். இவரது வித்தியாசமான நடிப்பில் வந்த திரைப்படம் ‘பா’. இந்த படத்தில் அமிதாப் ஒரு பாடல் பாடவேண்டியிருந்தது. இசைஞானியின் முன் பாடுவதற்கு தனக்கு தைரியம் இல்லை என அத்திரைப்படத்தின் பிரமோஷனின் போது தானே ஒப்புக்கொண்ட பிக் பி, "நீங்கள் மெட்டமைத்துக் கொடுத்துவிடுங்கள். நான் தனியாக இசையை கேட்டு, பாடி, பின்னர் தங்களுக்கு அனுப்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

அப்போது இளையராஜா நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து அசந்துபோன அந்த ’பிக் பி’ நெக்குருகிப் போய்விட்டார். இசைஞானி அன்றைக்கு நடந்துகொண்டதைப் பற்றி ஆகா ஓகோவென புகழ்ந்து தள்ளிவிட்டார்..

தான் நடித்த ஷெஹன்ஷா படத்தைவிட அமிதாப்புக்குப் பிடித்த படமாக 'பா' மாறியதற்கு இசைஞானி முக்கிய காரணமாகிவிட்டார்.

இளையராஜா
இளையராஜா தான் அடுத்த குடியரசு தலைவரா? பாஜக-வின் கணக்கு என்ன?

உலக நட்சத்திரம்

2000-க்கு பின் பிறந்த குழந்தைகளுக்கு முன்னரே 90களில் அனைவருக்கும் பிடித்தமான கலைஞரான ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கியது, பேசப்படுவதாக இருக்கிறது.

அதற்கு முன்னரே இளையராஜா எனும் தமிழ் இசையமைப்பாளர் உலக அளவில் இந்தியாவின் பெருமையை எடுத்துச்சென்றுவிட்டார்.

1990களின் தொடக்கத்தில் ஆசியாவிலேயே முதல் ஆளாக ராயல் சிம்பொனி இசைக்குழுவுடன் இணைந்து சிம்பொனி அமைத்த பெருமை, இசைஞானிக்கு உண்டு. அத்துடன், தளபதி திரைப்படத்தில் இடம்பெற்ற அவரின் 'ராக்கம்மா கையத்தட்டு' பாடலானது, அப்போது பிபிசி ஊடகம் உலக அளவில் வரிசைப்படுத்திய முதல் 10 இசைக்கோப்புகளில் ஒன்றாக இடம்பிடித்ததும் வரலாறு.

ilaiyaraaja
ilaiyaraajaTwitter

5 முறை தேசிய விருது

என்னதான் உலகப் பெருமை என்றாலும், உள்ளூர் அங்கீகாரம் என்ன என்பதும் முக்கியம் அல்லவா? இந்திய அளவில் சிறந்த திரையிசை அமைப்புக்காக மூன்று முறையும் பின்னணி இசைக்கோப்புக்காக இரண்டு முறையும் என ஐந்து முறை தேசிய திரைப்பட விருதுகளைத் தட்டியவர் இசைஞானி இளையராஜா.

நாட்டின் மூன்றாம் உயரிய விருதான பத்மபூசண், இரண்டாம் உயரிய விருதான பத்மவிபூசண் ஆகியவையும் இசைஞானிக்கு வழங்கப்பட்டு பெருமை அடைந்திருக்கின்றன.

இளையராஜா
இளையராஜா : அதிகம் கேட்டிராத இசைஞானியின் கானங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com