பிரதமர் மோடி மற்றும் அண்ணல் அம்பேத்கரை ஒப்பிட்டு சமீபத்தில் இளையராஜா கூறிய கருத்து பல தரப்பிலிருந்து ஆதரவையும் விமர்சனங்களையும் பெற்றது. இளையராஜா தன்னை ஆன்மிக வாதியாகக் காட்டிக்கொண்டாலும் அவரின் மோடி ஆதரவு மனப்பான்மை அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. இந்த நிலையில் வரப்போகும் குடியரசு தலைவர் தேர்தலில் இளையராஜாவை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதிக்குள் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சென்ற முறை போலத் தேர்தல் எளிதாக இருக்காது என பாஜக உணர்ந்திருக்கிறது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் வென்றிருந்தாலும் 2017 ஆம் ஆண்டு தேர்தலில் 65.5 விழுக்காடு வாக்கு பலத்துடன் இருந்த பா.ஜ.க.வின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தற்போது 48.8 விழுக்காடு வாக்குகளே உள்ளன. எனவே எதிர்க்கட்சிகளை ஒன்றிணைய விடாத அளவு வலுவான குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க பாஜக முடிவு செய்துள்ளது.
குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து டெல்லியில் உயர்மட்ட குழு ஆலோசனை நடந்து வருகிறது. இஸ்லாமியர் , தலித் போன்ற சிறுபான்மையினர்களுக்கு இதற்கு முன் குடியரசு தலைவர் பதவியை வழங்கியிருக்கும் பாஜக இம்முறையும் அதுபோன்ற முடிவையே எடுக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயல்களில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இறங்கிவிட்டதை அறிவோம். எனவே தமிழர் ஒருவரை வேட்பாளராக அறிவிப்பதன் மூலம் திமுகவுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தலாம் என்பது பாஜக-வின் திட்டமாக இருக்கலாம்.
“குடியரசு தேர்தலில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது” என பாஜகவுக்கு மன்ம்தா சவால் விட்டுள்ளதையும் இந்த நேரத்தில் கருத்தில் கொள்ள வேண்டும். இதற்கிடையில் வலிமையான குடியரசு தலைவர் வேட்பாளராக மோடியின் கண்களில் மிளிர்வது இளையராஜாவும் இஸ்ரோ தலைவர் கைலாசவடிவு சிவன்னும் தான். தமிழர் எனும் தகுதியே இளையராஜாவை குடியரசு தலைவர் பதவியில் அமர வைக்குமா எனப் பொருத்திருந்துப் பார்ப்போம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com