அன்புச்செழியன், தாணு, ஞானவேல் ராஜா : தயாரிப்பாளர்கள் மீது ஐடி ரெய்டு - பின்னணி என்ன?

சினிமா ஃபைனான்சியர் அன்புச் செழியன், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் மற்றும் வேலூரைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் சீனிவாசன் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகிறது.
தாணு - ஞானவேல் ராஜா
தாணு - ஞானவேல் ராஜாTwitter

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் மீது வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை 5 மணி முதல் இந்த சோதனைகள் நடந்து வருகின்றன.

சென்னையில் பல இடங்களிலும், மதுரை மற்றும் வேலூரிலும் சோதனை நடக்கிறது.

சினிமா ஃபைனான்சியர் அன்புச் செழியன், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் மற்றும் வேலூரைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் சீனிவாசன் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகிறது.

வருமானவரித்துறை சோதனைக்கு காரணம் என்ன?

சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் வெளியான பல திரைப்படங்கள் கணக்கில் வராத பணத்தில் எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெறுகிறது.

சினிமா ஃபைனான்சியர் அன்புச் செழியன்

கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட நிறுவனத்தை நடத்திவரும் அன்புச் செழியன் மீது கடந்த 2020ல் விஜயின் பிகில் திரைப்படம் தொடர்பாக ஏற்கெனவே ஐடி ரெய்டு நடந்தது.

அப்போது கணக்கில் வராத கோடிக்கணக்கான பணமும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை 5 மணி முதல் சென்னை மற்றும் மதுரையில் அன்புச் செழியனுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கலைப்புலி எஸ்.தாணு

தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளரான தானு மீதும் சோதனை நடைபெற்று வருகிறது. தி.நகர் பிரகாசம் சாலையில் உள்ள தாணுவின் அலுவலகத்திற்கு இரண்டு வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர் அசுரன், கர்ணன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாணு - ஞானவேல் ராஜா
விஜய் பட தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு அலுவலகத்தில் ஐடி ரெய்டு

எஸ்.ஆர்.பிரபு - ஞானவேல் ராஜா

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. காட்டேரி, விருமன், பத்து தல போன்ற படங்கள் சமீபத்தில் இந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டன.

எஸ்.ஆர்.பிரபு - ஞானவேல் ராஜா இதன் உரிமையாளர்கள். தியாகராயா நகர் தணிகாசலம் சாலையில் இதன் அலுவலகம் உள்ளது.

தாணு - ஞானவேல் ராஜா
Enjoy Enjaami தெரியும் : பெரும் சமூக மாற்றத்தை கொண்டு வந்த இந்த 5 பாடல்கள் தெரியுமா?

சத்யஜோதி பிலிம்ஸ்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யஜோதி பிலிம்ஸ் அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது. இதன் நிறுவனர் டி.ஜி.தியாகராஜன் ஆவார்.

தனுஷின் மாறன், ஹிப் ஹாப் தமிழாவின் அன்பறிவு உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் வெளியான இதன் தயாரிப்புகளாகும்.

மேலும், வேலூர் எஸ் பிலிம் உரிமையாளரான சீனிவாசன் என்பவரது அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

இன்னும் சில தயாரிப்பாளர்கள், வினியோகிஸ்தர்கள் மீது ரெய்டு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

தாணு - ஞானவேல் ராஜா
Ponniyin Selvan : "மணிரத்னம் தான் இந்த திரைப்படத்தை எடுப்பார்" - அன்றே கணித்த சுஜாதா

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com