Ponniyin Selvan : "மணிரத்னம் தான் இந்த திரைப்படத்தை எடுப்பார்" - அன்றே கணித்த சுஜாதா

கடந்த 2004ம் ஆண்டு மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கட்டுரைத் தொகுப்பு ஒன்றில், "மூன்று தலைமுறையினர் படித்துவந்த நாவலைத் திரைப்படமாக்கினால் எல்லோரையும் திருப்திப்படுத்துவது மிகமிகக் கடினம். மணிரத்னம், ஏறக்குறைய அதை நிறைவேற்றுமாறு திரைக்கதை செய்து வைத்திருக்கிறார்." என எழுதியிருக்கிறார் சுஜாதா.
ponniyin  selvan
ponniyin selvanTwitter
Published on

தமிழ் திரையுலகின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். எம்.ஜி.ஆர் தொடங்கி பல தசாப்தங்களாக பொன்னியின் செல்வனை படமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ஆனால் இந்த அதிர்ஷ்ட்டம் என்னவோ மணிரத்னத்துக்கு தான் கைகூடியிருக்கிறது. இது குறித்து முன்னதாகவே எழுத்தாளர் சுஜாதா எழுதிய குறிப்பு இப்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2004ம் ஆண்டு மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கட்டுரைத் தொகுப்பு ஒன்றில், "மூன்று தலைமுறையினர் படித்துவந்த நாவலைத் திரைப்படமாக்கினால் எல்லோரையும் திருப்திப்படுத்துவது மிகமிகக் கடினம். மணிரத்னம், ஏறக்குறைய அதை நிறைவேற்றுமாறு திரைக்கதை செய்து வைத்திருக்கிறார்." என எழுதியிருக்கிறார் சுஜாதா.

ponniyin  selvan
பொன்னியின் செல்வன் : பழையாறை கோவிலின் சிறப்புகள் என்ன?

“ கல்கியின் பொன்னியின் செல்வன் இரண்டாயிரம் பக்கம், ஐந்து பாகம் உள்ளது. அதை இரண்டரை மணி நேர திரைப்படமாக பலர் முயற்சி செய்து கைவிட்டிருக்கிறார்கள். ஜவ்வு போல மெகா சீரியலாக மாற்றுவது எளிது. சவால், இரண்டரை மணி நேர திரைப்படமாக்குவதில்தான்.

பொன்னியின் செல்வன் நாவலை... மூன்று தலைமுறையினர் படித்துவந்த நாவலைத் திரைப்படமாக்கினால் எல்லோரையும் திருப்திப்படுத்துவது மிகமிகக் கடினம். மணிரத்னம், ஏறக்குறைய அதை நிறைவேற்றுமாறு திரைக்கதை செய்து வைத்திருக்கிறார். எப்போதாவது அதைப் படமெடுப்பார் என்ற ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” என அதில் எழுதப்பட்டிருக்கிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாடலாக பொன்னிநதி பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருந்தார். அறிமுகப் பாடலாசிரியரான கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருந்தார்.

வெளியான அனைத்து மொழிகளிலும் ஏ.ஆர்.ர்ஹ்மானின் ட்யூன் ஹிட் அடித்தது.

ponniyin  selvan
என்ஜாய் எஞ்சாமி : தெருக்குரல் அறிவு எழுப்பிய கேள்வியும், சந்தோஷ் நாராயணன் பதிலும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com