சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பேரன்பை பெற்ற திருசிற்றம்பலம், மற்றும் அதிக ஆதர்வை பெற்றுவரும் பொன்னியின் செல்வன் திரைப்படங்களை பார்த்துவிட்டு மனம் திறந்து பாராட்டியிரிக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்.
மித்ரன் ஜவகர் இயக்கத்தில், தனுஷ் நித்யா மேனன், ராஷி கன்னா, ப்ரியா பவானிசங்கர், பாரதி ராஜா ஆகியோர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் திருசிற்றமபலம். அமைதியான, நகைச்சுவையான கதைக்களத்திற்காகவும், எளிமையான நடிப்பிற்காகவும் படம் ரசிகர்கள் பாராட்டை பெற்றது. அடுத்த வீட்டு பெண்ணாக அசத்தியிருந்தார் நித்யா மேனன். இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தன் டிவிட்டரில் கருத்துகளை பகிர்திருந்தார்.
"நிஜமாகவே ஒரு அழகான தமிழ் படத்தை பார்த்ததில் மகிழ்ச்சி. படம், கதை, தனுஷ், நித்யா மேனன் என அனைத்து அம்சங்களையும் ரசித்தேன். எவ்வளவு அருமையான நடிகை அவர்! பாரதிராஜாவும் அற்புதமாக நடித்திருந்தார்" என ட்வீட் செய்திருந்தார்.
உடன் இரு தினங்களுக்கு முன் வெளியான மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்துவிட்டும் டிகே ட்வீட் செய்திருந்தார். அதில் அவர், "பொன்னியின் செல்வன் பார்ப்பதற்கும் அற்புதம் + பிரம்மாண்டமான கதைகளம்.
கார்த்தி, ஐஸ்வர்யா, த்ரிஷா மற்றும் ஜெயம் ரவியும் சிறப்பாக நடித்திருந்தனர். ஆனாலும், எனக்கு படத்தில் ஃபேவரெட் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தான். நம்மை நிஜமாகவே சோழர்களின் காலக்கட்டதிற்கு அழைத்து சென்றுள்ளார். மணிரத்னம் சார்! நீங்கள் ஒரு ஜீனியஸ்" எனக் கூறியிருந்தார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுக்க 80 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust