90 கிட்ஸ்களின் ஃபேவரட் கார்டூன் ஷோ என்றால் அது டாம் அண்டு ஜெர்ரி தான்.
இன்றும் 90 களில் பிறந்தவர்கள் உற்ற நண்பனையோ சகோதரர்களையோ வேறு ஒரு நபருக்கு அறிமுகபடுத்தும் போது ’’நாங்க இப்படித்தான் டாம் அண்டு ஜெர்ரி மாதிரி அடிச்சிக்குவோம்" எனக் கூறுவர்.
டாம் அண்ட் ஜெர்ரி குறித்து இதுவரை அறியாத 10 தகவல்களை தற்போது காணலாம்.
1. டாம் அண்ட் ஜெர்ரி நிகழ்ச்சியானது விலியா ஹன்னா மற்றும் ஜோசப் பார்பெரா ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
இவர்கள்தான் மற்றொரு புகழ்பெற்ற கார்ட்டூன்களான ஸ்கூபி-டூ, தி பிளின்ட்ஸ்டோன்ஸ் போன்ற பல கார்ட்டூன் நிகழ்ச்சிகளை உருவாகியவர்கள்
2. 1940 பிப்ரவரி 10ல் அறிமுகாமான டாம் அண்ட் ஜெர்ரி முதல் எபிசோட் மிகவும் நீளமானது. இதில் டாம் இரண்டு கால்களில் நடக்கவில்லை சாதாரண பூனைகள் போல நான்கு கால்களில் நடந்தது. இந்த முதல் எபிசோடிற்கு 'கெட்ஸ் தி பூட்' என்று பெயர் வைக்கப்பட்டது.
3. 1940 ல் வெளியான டாம் &ஜெர்ரி முதல் எபிசோடில் அவற்றுக்கு பூனைக்கும் எலிக்கும் ஜாஸ்பர் மற்றும் ஜின்க்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.
4. டாம் அண்ட் ஜெர்ரி ஷோவினை உருவாக்கிய MGM, ஸ்டுடியோ டாம் & ஜெர்ரிக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை என எண்ணியது. அதன் பின்னர் 1941 இல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிறகு MGM,ஸ்டியோ அதிக எபிசோடுகளை உருவாக்கியது.
5. டாம் அண்ட் ஜெர்ரி எபிசோடின் சிறப்பு என்னவென்றால் டாம் மற்றும் ஜெர்ரி பேசிகொள்ளாது. ஆனால் 1992ல் ஒரு திரைப்படத்தில், டாம் அண்ட் ஜெர்ரி ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டது.
6. டாம் அண்டு ஜெர்ரி கார்டூன்கள் ஆஸ்கார் விருதுக்கு 13 முறை பரிந்துரைக்கப்பட்டு 7 முறை வெற்றி பெற்றுள்ளது.
7. டாம் அண்டு ஜெர்ரியின் புகழ் நாசாவை விட்டு வைக்கவில்லை, தனது இரண்டுசெயற்கை கோள்களுக்கு டாம் அண்டு ஜெர்ரி என பெயர்வைத்துள்ளது.
8. 1975 ல் டாம் அண்டு ஜெர்ரி திகில் தொடராக மாற்றி உருவாக்கப்பட்டது. ஆனால் அது நீண்டகாலம் தொடரவில்லை
9. 1940 முதல் 2014 வரை டாம் அண்டு ஜெர்ரி 164 குறும்படங்கள்,162 நாடகங்களாக உள்ளது
10. டாம் அண்டு ஜெர்ரி நாடகத்தின் இறுதி பகுதி இன்னும் மர்மமாகவே உள்ளது. இறுதி எபிசோடில் டாம் அண்ட் ஜெர்ரி ஒரு ரயில் பாதையில் தங்கள் வாழ்க்கையினை முடித்து கொள்வதாக தொடர் முடிகின்றது.
டாம் அண்டு ஜெர்ரி 90 கிட்ஸ்களின் இரத்ததில் கலந்த காவியம்.
உங்களோட டாம் மற்றும் ஜெர்ரி யாரு ?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust