தமிழ் சினிமாவில் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு முன்மாதிரியாக இருந்து வருகிறார் இயக்குநர் பார்த்திபன்.
கடந்த ஜூலை 15ம் தேதி பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் வெளியானது. ஒத்த செருப்பு படத்தைத் தொடர்ந்து புதுமையான முயற்சியாக இந்த படம் இருந்ததால் படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு கிடைத்தது.
எனினும் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது இரவின் நிழல் திரைப்படம்.
இந்த படத்துக்கு பிரபல யூடியூப் சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் எதிர்மறை விமர்சனங்களையே கொடுத்திருந்தார். அத்துடன் பார்த்திபன் விளம்பரம் செய்வது போல இரவின் நிழல் உலகின் முதல் non - linear single shot திரைப்படம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
டிவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், 2013ம் ஆண்டு வெளியான fish & cat தான் முதல் non - linear single shot திரைப்படம் என்கிறார் மாறன். இதனை நிரூபிக்க variety.com தளத்தின் விமர்சனத்தை தனது ட்வீட்டில் இணைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பார்த்திபன் ரசிகர்கள் புதுச்சேரியில் புளூசட்டை மாறனின் உருவ பொம்மை எரிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
இதனை மறுத்துள்ள பார்த்திபன் தனது ரசிகர்கள் அதுபோன்ற செயலில் ஈடுபடவில்லை என இன்று வெளியிட்ட ஆடியோவில் கூறியுள்ளார். நடந்த சம்பவத்துக்காக வருந்துவதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் அந்த ஆடியோவில் தயாரிப்பாளர் ஒருவரின் படத்தை விமர்சனம் செய்ய புளூ சட்டை மாறன் 3 லட்சம் பணம் கேட்டதகவும் கூறியுள்ளார். எனினும் அதற்கான ஆதாரம் எதையும் அவர் வெளிப்படுத்தவில்லை.
இத்துடன் கடந்த ஒரு வருடமாக தான் உலகின் முதல் non - linear single shot படம் என விளம்பரம் செய்து வருவதாகவும் ஏன் இத்தனை நாட்கள் புளூ சட்டை மாறன் எதுவும் கூறவில்லை என்றும் அந்த ஆடியோவில் கேள்வியெழுப்பியுள்ளார்.
மாறன் குறிப்பிடும் fish & cat படத்தைத் தான் இப்போது வரைப்பார்த்ததில்லை என்றும் பார்த்திபன் அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.
தற்போது ஒத்த செருப்பு படத்தை உலகின் முதல் தனிநபர் எழுதி, இயக்கி, தயாரித்து, நடிக்கும் திரைப்படம் எனக் கூறியதற்காக தான் வாட்ஸப்பில் பிளாக் செய்யப்பட்டதாக கர்மா திரைப்பட இயக்குநர் அரவிந்தன் கூறுவதாக ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார் மாறன்.
உண்மையில் இரவின் நிழல் தான் முதல் single shot non-linear திரைப்படமா? விமர்சனத்துக்கு பணம் வாங்குகிறாரா மாறன் என்ற கேள்விகள் தற்போது ரசிகர்களை குழப்பமடையச் செய்துள்ளன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust