மேடையில் மைக்கை வீசியெறிந்த பார்த்திபன் - இசை வெளியீட்டு விழாவில் என்ன நடந்தது?

சினிமாவில் புதிய முயற்சியாக இரவின் நிழல் படத்தை ஒரே ஷாட்டில் இயக்கியிருக்கிறார் பார்த்திபன். இந்த படத்தின் நீளம் 96 நிமிடங்கள். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
Parthiban, Rahman
Parthiban, RahmanTwitter
Published on

பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் பட இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பேசினர். அப்போது பார்த்திபன் பேசுகையில் திடீரென மைக் வேலை செய்யாததால் அதனைத் தூக்கி எறிந்தார். இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட சுற்றியிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு வேறு மைக்கை வாங்கி பேசத் தொடங்கினார் பார்த்திபன்.

சினிமாவில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் பார்த்திபன் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் பங்கேற்கும் ஒத்த செருப்பு படத்தை இயக்கினார். அதே போல புதிய முயற்சியாக இரவின் நிழல் படத்தை ஒரே ஷாட்டில் இயக்கியிருக்கிறார் பார்த்திபன். இந்த படத்தின் நீளம் 96 நிமிடங்கள். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Iravin Nizhal
Iravin NizhalTwitter
Parthiban, Rahman
தமிழன்னை புகைப்படம்: ஏ.ஆர் ரஹ்மானுக்கு எதிராக கமிஷனர் அலுவலகத்தில் புகார்

இதுவரை ‘இரவின் நிழல்’ படத்தை பார்த்தவர்களிடமிருந்து நேர்மறையான பாராட்டுகள் கிடைத்திருக்கிறது. ரஹ்மானின் இசை இந்த படத்தைத் தூக்கி நிறுத்துவதில் முக்கியப்பங்காற்றியிருக்கிறது. ஆஸ்கார் விருது வென்ற ஸ்லம்டக் மில்லியனர் படத்தில் வேலை செய்த 3 தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த படத்தில் உள்ளனர்.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஹ்மான், “பார்த்திபனின் இரவில் நிழல் திரைப்படம் மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவில் வெளியாகி இருந்தால் உலகமே கொண்டாடி இருக்கும். தமிழ் திரைக்கலைஞர்களிடம் பல திறமைகள் உள்ளன. நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்” என்றார்.

பார்த்திபனின் புதிய வித்தியாசமான முயற்சிகளுக்குச் சலாம் சொல்லும் ரசிகர்கள். “கொஞ்சம் டென்ஷனை குறைச்சிக்கங்க பார்த்திபன்” என அட்வைசும் செய்கின்றனர்.

ஏற்கெனவே ஆசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம் பெற்றுள்ள இரவின் நிழல் திரைப்படம் இன்னும் பல சாதனைகள் செய்யும் என எதிர்பார்ப்போம்.

Parthiban, Rahman
துபாயின் தங்க விசா பெற்ற நடிகர் ஆர் பார்த்திபன்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com